பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பூர்ணசந்திரோதயம் -4 தண்டனை அடைகையில் அதை நான் தடுப்பது தவறு. ஆகையால், நான் இப்போது உள்ளேபோவது சரியல்ல. வாநாம் மறுபடியும் சக்கா நாயக்கர் தெருவுக்குப் போவோம்” என்று கூறியவண்ணம் அந்த அழகிய மங்கையை அழைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டுச்செல்லலானார். கால் நாழிகை நேரத்தில் அவர்கள் இருவரும் சக்கா நாயக்கர் தெரு, 13வது இலக்கமுள்ள வீட்டை அடைந்தனர். இன்ஸ்பெக்டர் கதவண்டை போய் நின்று கொண்டு, ‘ஐயா ஐயா!’ என்று கதவை இரண்டு மூன்று தடவை தட்டினார். அப்போது அகால வேளையாதலால், எல்லோரும் கடுந்துயிலில் ஆழ்ந்திருந்தனர். ஆகவே, எவ்வித மறுமொழியும் கிடைக்கவில்லை. இன்ஸ்பெக்டர் முன்னிலும் அதிக பலமாகக் கதவைத்தட்டி ஓங்கிய குரலில் கூப்பிட “யார் அது? யார்கதவைத்தட்டுகிறது?’ என்று வினவிக் கொண்டு ஒரு மனிதர் வந்ததாகத் தெரிந்தது. அடுத்த rணத்தில் கதவு திறக்கப்பட்டது. உட்புறத்தில் கையில் விளக்கோடு ஒரு யெளவன புருஷர் நின்று கொண்டிருந்தார். அவர், அந்த அர்த்த ராத்திரி வேளையில் யார் வந்து கதவை இடிக்கப் போகிறார்கள் என்று சந்தேகித்தவராய் வந்து வெளியில் நின்றவர்களை உற்று

நோக்கினார்.

தமது உத்தியோக உடைகளை அணிந்து நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டரும், அவருக்குப் பின்னால் நின்ற யெளவன சுந்தரியான ஷண்முகவடிவும் அவரது திருஷ்டியில் படவே, அவர் அளவற்ற வியப்பும் பிரமிப்பும் அடைந்தவராய்க்கலங்கி நின்றார். அவர் ஒருவித அச்சம் கொண்டார் என்பதை அவரது முகத்தோற்றம் நன்றாகக் காண்பித்தது. ஆனாலும், அவர் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், இன்ஸ் பெக்ட ரோடு மரியாதையாக சம்பாஷிக்கத் தொடங்கி, “தாங்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் போலிருக்கிறது. இங்கே யாரைத் தேடுகிறீர்களோ? என்றார்.

உடனே இன்ஸ்பெக்டர், ‘ஐயா! மன்னிக்க வேண்டும்.