பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 241. வாயைத் திறந்து பேசமாட்டாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.

இன்:- அம்மா! கோலாப்பூரில் உங்களுடைய நெருங்கிய உறவினர் யாராவது போலீஸ் கமிஷனராக இருக்கிறாரா?

அம்மணிபாயி:- இப்போது இங்கே வந்துவிட்டுப் போனவர் என்னுடைய தமையனாருடைய பிள்ளை. இவரைத் தவிர, எனக்கு இந்த ஊரிலாவது வேறு எந்த ஊரிலாவது சொந்தக் காரரே இல்லை. கோலாப்பூர் எங்கேயிருக்கிறது! நான் எங்கே இருக்கிறேன்! அவ்வளவு தூரதேசத்தில் எனக்கு உறவினர் இருக்க முகாந்திரமே இல்லையே!

இன்:- (வியப் போடு) அப்படியானால் நீங்கள் அந்த ஊருக்குப் போயிருந்து சில தினங்களுக்கு முன் இந்த ஊருக்குத் திரும்பி வந்தீர்களென்பது நிஜமல்லவா?

அம்மனி:- அந்த ஊரில் எனக்கு என்ன வேலை இருக்கிறது? நானும் என் அண்ணன் மகனும் அரண்மனையில் இளவரசரிடம் வேலை செய்கிறவர்கள். என் அண்ணன் மகன் இளவரசரிடம் அந்தரங்கக் காரியதரிசியாக இருப்பவன். நாங்கள் இருவரும் இந்த அரண்மனையைவிட்டு ஒரு நாழிகை சாவகாசம் கூட வெளியில் வர அனுமதி கிடைக்கிறதில்லையே. அப்படியிருக்க நான் கோலாப்பூருக்கு எப்படிப் போக முடியும்? நாங்கள் இந்த ஊரைவிட்டு எங்கேயும் போனதே இல்லையென்று இளவரச ருடைய கைப்பட ஒரு கடிதம் வேண்டுமானால் வாங்கிக் கொடுக் கிறோம் - என்று அழுத்தமாகவும் உறுதியாகவும் கூறினாள்.

அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர் ஒருவாறு பயந்து போனார். அவர்கள் இளவரசரிடம் உத்தியோகம் வகிக்கும் கண்ணியமான மனிதர்கள் என்ற எண்ணமும், ஒருவேளை ஷண்முகவடிவு ஆள் மாறாட்டாகப் பேசுகிறாளோ என்ற சந்தேகமும் அவரது மனதில் தோன்றின. ஆனால், ஷண்முகவடிவு காட்டிய