பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பூர்ணசந்திரோதயம்-4 கடிதங்களில் குறிக்கப்பட்டிருந்த விலாசமும் அந்த வீட்டின் விலாசமும் பொருந்தியிருந்ததைக் கொண்டு ஷண்முகவடிவு நிஜம் பேசுகிறாள் என்பது ஒருவாறு உறுதிப்பட்டது. ஆனாலும், அம்மனிபாயி அவ்வளவு உறுதியாகப் பேசுகையில் தாம் அதை மறுத்துக் கூறத் தம்மிடம் போதுமான வேறு ஆதாரம் எதுவுமில்லை என்பதை உணர்ந்த இன்ஸ்பெக்டர் மறுபடியும் அம்மணிபாயியைப் பார்த்து, “அப்படியானால், இந்தப் பெண் சொல்வதில் ஏதோ தவறு இருக்கிறதென்று எண்ணுகிறீர்கள்? கமலம் என்ற பெண் இந்த வீட்டில் ஒருநாளும் இருந்ததே இல்லையா? அந்தப் பெயருடைய பெண்ணைப்பற்றிய விவரம் எதுவும் உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாதா?’ என்றார்.

அம்மணி பாயி, ‘தெரியவே தெரியாது. கமலம் என்ற பெயருடைய பெண் எங்கள் வீட்டில் ஒருநாளும் இருந்ததே யில்லை. கமலம் என்ற பெண் தான் இருக்கும் உண்மையான இடம் தன்னுடைய மனுஷ்யாளுக்குத் தெரியக் கூடாதென்று ஏதாவது ஒரு பொய்யான விலாசமும் கொடுத்திருக்கலாம். தற்செயலாக அதுவும் எங்கள் வீட்டு விலாசமும் ஒத்துப் போயிருக்கலாம். அப்படியிருக்க வேண்டுமே தவிர, கமலம் என்பவள் யாரும் இங்கே இருந்ததில்லை” என்றாள்.

இன்ஸ்பெக்டர், ‘ஆம் அப்படியும் இருக்கலாம். ஆனால் அதில் இன்னொரு விஷயம் இருக்கிறதே. இந்தப்பெண் இந்தக் கடிதத்திலுள்ள விலாசத்துக்குப் பல கடிதங்கள் எழுதியிருக் கிறாள். அவைகளுக்கெல்லாம் மறுமொழிக் கடிதங்கள் வந்திருக்கின்றனவே! அது எப்படி நடந்திருக்கும்?’ என்றார்.

அம்மணிபாயி, ‘இவ்வளவுதூரம் யோசனை செய்து தப்பான விலாசம் கொடுத்திருப்பவள், அதற்குத் தகுந்த யோசனை செய்திருக்க மாட்டாளா? தபால் இலாகாவுக்கு எழுதியோ, அல்லது தபால்காரனிடம் ரகசியமான ஏற்பாடு செய்து கொண்டோ இருந்தால் சக்கா நாயக்கர் தெரு 13வது இலக்கமிட்ட வீட்டிலுள்ள கமலத்துக்கு என்று வரும்