பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 . பூர்ணசந்திரோதயம்-4 அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர், ‘நீ கவலைப்படாதே; யார் சொல்வது உண்மையென்பது எனக்கு நன்றாகத் தெரிந்து போய்விட்டது. நான் சொன்ன ஒவ்வொரு விஷயத்துக்கும் அவள் கொஞ்சமும் யோசிக்காமல் உடனுக்குடனே ஆட்சேபணை சமாதானங்கள் சொல்லி வந்ததைப் பார்த்தபோது, இவள் இந்த விஷயங்களை எல்லாம் ஏற்கெனவே எதிர்பார்த்து, அதற்குத் தகுந்தபடி நடந்துகொள்ள ஏற்பாடு செய்திருக்கிறாள் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. இருக்கட்டும். இவள் எங்கேதப்பினாள். பொழுது விடியட்டும். நான் பலவகையில் முயற்சிசெய்து உண்மையைத் தெரிந்து கொண்டு கமலம் என்ன ஆனாள் என்பதைக் கண்டுபிடிக்கிறேன். நான் இவர்களை இலே சில் விட்டு விடுவேன் என்று நினைக்காதே’ என்றார்.

ஷண்முகவடிவு, ‘என்னவோ எல்லாம் உங்களுடையதயவு. நீங்கள் எப்படியாவது பிரயாசைப் பட்டு, என் தமக்கை உயிரோடு இருக்கிறாளா என்பதையும், எங்கே இருக்கிறாள் என்பதையும் கண்டுபிடித்து, என்னை அவள் இருக்கும் இடத்துக்குக் கொண்டு போய்ச்சேர்த்துவிட வேண்டும். இந்தப் பேருதவியை நான் என்றைக்கும் மறக்கவே மாட்டேன்’ என்று நிரம்பவும் பணிவாகவும் பரிதாபகரமாகவும் கூறினாள்.

இன்ஸ் பெக்டர், “சரி; அப்படியே ஆகட்டும். நான் உன்னுடைய வேண்டுகோளைப் பூர்த்தி செய்கிறேன்’ என்று கூறினார்.

அவ்வாறு சம்பாஷித்த வண்ணம் அவர்கள் இருவரும் பற்பல தெருக்களையும் சந்துகளையும் கடந்து கீழ்க்கோட்டை வாசலுக்கு அருகிலிருந்த போலீஸ் ஸ்டேஷனை நோக்கிச் சென்றனர். அப்போது இன்ஸ்பெக்டர் அவளை நோக்கி, ‘பெண்ணே இப்போது இரவு இரண்டுமணி சமயம் இருக்குமென்று நினைக்கிறேன். எனக்குத் தூக்கம் வருகிறது. நீயும் களைத்துப் போயிருக்கிறாய். ஆதலால், பொழுது விடிகிற