பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 251 நல்ல சமயத்தில் தனக்கு அருந்துணையாக வந்து வாய்த்த உத்தம புருஷரான அந்த இன்ஸ்பெக்டரும் பலவந்தமாகத் தன்னை விட்டுப் பிரிக்கப்பட்டுப் போனதைக் கண்ட அந்தப் பெண்மணியின் மனம் இடிந்து உட்கார்ந்துபோயிற்று. தான் அந்த அகாலவேளையில் எந்த வீட்டிற்குப் போவது, தன்னை யாரென்று சொல்வது என்பதை உணராதவளாய்க்கலங்கினாள். சிறிதுதுரத்திற்கப்பால் சண்டையிட்ட மனிதர் கும்பலிலிருந்து பல மனிதர்கள் பயந்துகொண்டோ, அல்லது தத்தம் இல்லங்களுக்குப் போய் இன்னம் அதிக மனிதரை அழைத்து வரவோ, நாற்புறங்களிலும் சிதறியோடினர். மிகுதியிருந்த கும்பல் சண்டையிட்டபடி அவள் இருந்த திசையில் நகர்ந்து வருவதாகத் தோன்றவே, தான் அதற்கு மேல் அவ்விடத்தில் தனியாக நிற்பது முற்றிலும் அபாயகரமான காரியம் என்று ஷண்முகவடிவு நினைத்து, சரேலென்று நாற்புறங்களிலும் திரும்பிப்பார்த்தாள். சுமார் இருபதுகஜதுரத்திற்கு அப்பால் ஒரு சந்து போய்க் கொண்டிருந்தது. அந்தச் சந்தின் இரண்டு பக்கங்களிலும் வீடுகள் வரிசையாக அடர்ந்திருந்தன. அந்தச் சந்தில் சில வீடுகளுக்குள்ளிருந்த மனிதர்கள் சிறிது தூரத்தில் உண்டான ஆரவாரத்தைக்கேட்டு திடுக்கிட்டு விழித்தெழுந்து வேடிக்கை பார்ப்பதற்காக கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்து வாசற்படியில் நின்றபடி தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததை ஷண்முகவடிவு கவனித்தாள். ஆதலால், தான் அந்தச் சந்திற்குப் போய் ஏதாவது ஒரு வீட்டில் இருந்து அந்த இரவைப் போக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டவளாய், அவ்விடத்தை விட்டு நடந்து அந்தச் சந்தை நோக்கிச் சென்று அதற்குள் நுழைந்தாள். அங்கிருந்த வீட்டு வாசல்களில் நின்ற மனிதர்கள் ஷண்முகவடிவை நோக்கி, “என்ன அம்மா அங்கே கூச்சல் பெருத்த அமர்க்களமாக இருக்கிறதே என்றனர். -

உடனே ஷண்முகவடிவு, ‘கலியாணத்துக்காக யாரோ பெண்ணை அழைத்துக்கொண்டு போகிறார்களாம். எதிர்க்