பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 பூர்ணசந்திரோதயம்-4 எடுத்துத் தனது கையில் வைத்துக் கொண்டவளாயிருக்க, சிறிது நேரத்தில் கிழவி தனது கையில் இரண்டு பாய்களையும் இரண்டு தலையணைகளையும் எடுத்துக்கொண்டு அவளிடம் வந்து சேர்ந்தாள்.

வந்தவள் ஷண்முகவடிவைக் கூர்ந்து நோக்கி, ‘அந்தச் சண்டையின் கூக்குரலினால் என் தம்பி விழித்துக்கொண்டார் போலிருக்கிறது. நான் போனதைக்கண்டு என்னவிசேஷமென்று கேட்டார். கதியையும் அவரிடம் சொல்லிவிட்டு வந்தேன். அதனால்தான் கொஞ்சம் காலதாமதமானது. வா போய் ப் படுத்துக்கொள்வோம். இவ்விடத்தில் கொசுக்கடி அதிகமாக இருக்கும். ஆகையால், அதோ எதிரிலிருக்கும் அறைக்குள் போயப் படுத்துக் கொள்வோம். அங்கே அவ்வளவாகக் கொசுக்கடி இருக்காது. அது ஒருபக்கமான இடமாகவும் இருக்கும்’ என்றாள்.

உடனே ஷண்முகவடிவு, சரி; அதுவே நல்ல இடம், அவ்விடத்திலேயே படுத்துக் கொள்ளலாம் ‘ என்று கூறிய வண்ணம் விளக்கைக் கையில் எடுத்துக்கொண்டு எழுந்து கிழவிக்கு வழிகாட்டிச் சென்றாள். இருவரும் எதிரிலிருந்த அறைக்குள்துழைந்தனர். அந்த அறையின் உட்புறத்தில் எவ்வித வஸ்துவும் காணப்படவில்லை. அதி நன்றாகப் பெருக்கி மெழுகப்பட்டு வழுவழுப்பாகவும் செத்தைகுப்பை இல்லாமல் சுத்தமாகவும் இருந்தது.

கிழவி தனது கையிலிருந்த இரண்டு பாய்களையும் விரித்துத் தலையணைகளை வைத்துவிட்டுக் கதவண்டை இருந்தபாயில் தான் படுத்துக் கொள்வதாகக் கூறி ஷண்முகவடிவை நோக்கி இன்னொரு பாயில் படுத்துக்கொள்ளும் படி கூறினாள். அதன்படியே அந்த யெளவன மாது தனக்காகப் பிரிக்கப்பெற்ற பாயில் உட்கார்ந்து மெதுவாகப் படுத்துக்கொண்டாள். கிழவி வாசற் படியண்டை போய்க் கதவைச் சாத்திவிட்டு வந்து, ‘விளக்கை அனைத்து விட்டால்தான் கொசு வராது.