பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 பூர்ணசந்திரோதயம்-4 ஈயக்குண்டுகள்போல கனத்துத் திறக்க மாட்டாமல் மூடிக் கொண்டிருந்தன. மனம் மாத்திரம் விழிப்பிற்கும் நித்திரைக்கும் நடுமத்தியமான மயக்க நிலைமையில் இருந்தது.

அதுவரையில் ஆழ்ந்து நித்திரைசெய்து குறட்டை விடுகிறவள் போலத் தோன்றிய கிழவி திடீரென்று விழித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்துதணிவான குரலில் தனக்குத்தானே பேசத் தொடங்கி, “ஷண்முகவடிவு அலுத்துத் துங்குகிறாள் போலிருக்கிறது. துங்கட்டும். எனக்கு ஒன்றுக்கு வருகிறது. நான் மெதுவாக எழுந்து போய் விட்டு வந்து படுத்துக் கொள்ளுகிறேன்” என்று கூறியவண்ணம் எழுந்து மெதுவாகக் கதவண்டை போய் ஒரு பக்கத்துக் கதவைச் சிறிதளவு திறந்து கொண்டு போய்விட்டாள். அவள் தனக்குத்தானே சொல்லிக் கொண்ட வார்த்தைகள் ஷண்முகவடிவின் உணர்வில் பட்டனவானாலும், அது அவளுக்குச் சொப்பனம் போல இருந்தது. கிழவி எழுந்து ஒன்றுக்குப் போயிருக்கிறாள் என்பது மாத்திரம் தெரிந்ததே அன்றி அவளது வாய் பேசமாட்டாமலும் உடம்பு அசைக்க இயலாமலும் இருந்தன. -

அவ்வாறு கால்நாழிகை சாவகாசம் கழிந்தது. திறக்கப்பட்டி ருந்த கதவில் மனிதர் உராயும் சப்தம் கேட்டது. அடுத்த நிமிஷத்தில் யாரோ ஒருவர் அறைக்குள் வந்து கதவை உட் புறத்தில் தாளிட்டுக்கொண்டு வந்து பாயில் படுத்ததாக ஷண்முக வடிவு ஒரு வாறு உணர்ந்தாள். அதன்பிறகு கால் நாழிகை சாவகாசம் கழிந்தது. நமது இளந்தோகையான ஷண்முகவடிவு தூக்கத்தில் ஆழும் சமயத்தில் இருக்க, பக்கத்தில் படுத்திருந்தவரது வலது கால்தன் மீது போடப்பட்டதை அவள் உணர்ந்தாள். அப்போதும் அவளது மயக்கம் தெளியவில்லை. அடுத்த நிமிஷத்தில், ஒரு கை வந்து அவளைப் பலமாக அனைத்துக்கொண்டதை உணரவே, ஷண்முகவடிவு ஏதோ விபரீத சம்பவம் நடக்கிறதென்று நினைத்து சடக்கென்று தனது கண்களை விழித்துக்கொண்டு, தன் மீது போட்டு அணைக்கப்