பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 - பூர்ணசந்திரோதயம்-4

சன்னியாசி:- (சிரித்துக் கொண்டு) ஒகோ! என்னைப் பார்த்தால் அர்ச்சுன சன்னியாசி போலவா இருக்கிறது! என்னுடைய வேஷம் அப்படி இருக்கலாம். என்னுடைய கருத்துக்கும் அர்ச்சுனனுடைய கருத்துக்கும் நேர் விரோதமாக அல்லவா இருக்கிறது. அவன் ஒரு பெண்ணைப் பிடிக்கிற தற்காக சன்னியாசி வேஷம் போட்டான். நான் ஒரு ஸ்திரீயின் திருட்டைக் கண்டுபிடித்து அவளை விலக்குவதற்காக இந்த வேஷம் போட்டிருக்கிறேன்.

சாமளராவ்:- (நிரம்பவும் பணிவாகவும் சந்தோஷமாகவும்) ஆம், வாஸ்தவந்தான். நான் வெளிவேஷத்திற்கு மாத்திரந்தான் உவமையாகச் சொன்னேனே அன்றிக் கருத்தைப் பற்றிப் பேசவில்லை. இருந்தாலும் பூர்ணசந்திரோதயத்தைப் பிடிப்பதற் காகத்தானே நீங்கள் அதற்குப் பூர்வ பீடிகையாக இப்படி வேஷம்போட்டு இந்தக் காரியத்தை முடிக்க வந்திருக்கிறீர்கள்.

இளவரசர்:- (சிரித்துக்கொண்டு) ஆம், நீ சொல்லுவது ஒரு விதத்தில் பொருத்தமாகத்தான் இருக்கிறது.

சாமளராவ்:- என்னவோ என் மனசில் மாத்திரம் சந்தேகம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. எவனோ ஒரு பைத்தியக்காரன் எழுதிய அநாமதேயக் கடிதத்தை நம்பி நாம் அநாவசியமாக இவ்வளவு தூரம் வந்தோமே என்ற எண்ணம் உண்டாகிக்கொண்டே இருக்கிறது. அநேகமாய்க் கடிதம் பொய்க் கடிதமாகத்தான் இருக்க வேண்டும். பட்டமகிஷியின் குணம் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் இப்படிப்பட்ட கேவலமான நடத்தைக்கு ஒருப்படக் கூடியவர்களே அல்ல. என்னவோ பார்க்கலாம். நீங்கள் ஒரே பிடிவாதமாக இங்கே வந்து இதன் உண்மையைக் கண்டுபிடித்தே தீரவேண்டுமென்று சொன்னீர்கள். எப்படியாவது அந்தக்கடிதம் பொய்க் கடிதம் என்றே ருஜாவாகி விடவேண்டுமென்று நான் ஈசுவரனைப் பிரார்த்திக்கொண்டே இருக்கிறேன். ஆம் அதிருக்கட்டும். நாம் இங்கே வந்திருக்கிறோமே. இனிமேல் என்ன செய்ய