பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 269

சலவைக்கல் மேடையினடியில் நீங்கள் இருக்கையில் உங்களுக்கு ஆத்திரம் உண்டாக்கக்கூடிய காரியம் ஏதாவது நடக்குமானாலும் நீங்கள் பொறுமையோடு அங்கேயே மறைந்திருந்து விஷயங்களை மாத்திரம் தெரிந்து கொண்டு வந்து சேருங்கள். இன்னம் இரண்டொரு தினத்தில் நான் மறுபடி உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பலாமென்று நம்புகிறேன்.

என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தை சாமளராவ் படித்து முடித்தான்.

உடனே இளவரசர், “சரி; நாம் அதிக காலம் இங்கே தாமதிக்க வேண்டிய அவசியமே இல்லை. எல்லாம் சீக்கிரம் தெரிந்து போகும்’ என்றார்.

சாமளராவ் சந்தேகமாகவே பேசத்தொடங்கி, “என்னவோ என் மனசுக்கு இது உண்மையாக இருக்கும் எனத் தோன்றவே இல்லை. பட்டமகிஷிக்கு விரோதமான மனிதர் யாராவது இப்படி ஏதோ தந்திரம் செய்கிறார்களென்றுதான் என் மனம் எண்ணுகிறது’ என்றான்.

இளவரசர், “நீ கடைசிவரையில் சந்தேகப்பட்டுக்கொண்டே இரு எப்படியிருந்தாலும், இன்று ராத்திரி எல்லா விஷயமும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்துபோகப் போகிறது. அதன்பிறகு நீ என்ன சொல்வாயோ பார்க்கலாம்’ என்றார். -

அப்போது அநேகமாய் மாலை வேளை ஆகிவிட்டதென்றே சொல்லவேண்டும். சூரியன் மேற்றிசையில் மறைந்தபின் அரை நாழிகை சாவகாசம் கழிந்துபோய்விட்டது. ஆங்காங்கு விளக்குகள் கொளுத்தப்பட்டுப் போயின. அவர்கள் இருவரும் சத்திரத்தை விட்டுப் புறப்பட்டு வெளியில் போய் அந்தப் பட்டணத்தைக் கடந்து சிறிதுதுரம் அப்பால் சென்று உல்லாசமாக உலாவிவிட்டு திரும்பி வந்து அரண்மனைப் பூங்காவனத்தை அடைந்து அந்தக்கடிதத்தில் குறிக்கப்பட்டிருந்த சிறிய மதில் கதவண்டை போய் நின்று, நாற் புறங்களிலும்