பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27C - பூர்ணசந்திரோதயம்-4 திரும்பிப் பார்த்தனர். மனிதர் யாரும் காணப்படவில்லை. எங்கும் இருள் சூழ்ந்து கொண்டிருந்தமையால், அவர்களை வேறு எவரும் பார்க்க இயலாமலும் இருந்தது. சாமளராவ் தனது கையை வைத்துக் கதவை மெதுவாகத் தள்ள அது திறந்து கொண்டது. சாமளராவ் தனது சிரசை உட்புறத்தில் நீட்டி அவ்விடத்தில் யாராகிலும் மனிதர் நிற்கிறார்களோ என்று பார்த்தான். யாரும் காணப்படவில்லை. “சரி உள்ளேபோகலாம் வாருங்கள்’ என்று அவன் இளவரசரிடம் கூறியவண்ணம், முதலில் உள்ளே நுழைந்தான். அதன்பிறகு இளவரசரும் தமது பிரம்மாண்டமான தேகத்தை நிரம்பவும் பாடுபட்டு ஒடுக்கிக் கொண்டு அதற்குள் நுழைந்து அப்பால் சென்று கதவை மறுபடியும் மூடினார்.

பிறகு இருவரும் அந்தப் பூங்காவனத்திற்குள், கடிதத்தில் குறிக்கப்பட்ட திக்கில் செல்லலாயினர். அவர்கள் சென்ற திசை யில் எதிர்பக்கத்தில் ராஜஸ்திரீகள் அந்தப்புரம் ஆகாயத்தை அளாவி நின்றது. அந்தப் பெரிய மாடத்தில் ஏராளமான விளக்குகள் கொளுத்தப்பட்டிருந்தன வென்பது நன்றாகத் தெரிந்தது. அவர்களிருந்த பூங்காவனத்திலும் ஆங்காங்கு கம்பங்களில் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், மனிதர் யாரும் தென்படவில்லை. அவர்களிருவரும் மரத்து இருளில் மறைந்து மறைந்து ஆலவிருகூத்தையும் சலவைக்கல் மேடையையும் அடைந்தனர். அவ்விடம் இருண்டிருந்தது. அவர்கள் நாற் புறங்களிலும் திரும் பிப் பார்த்தனர். பூங்கா வனத்தில் மனிதர் யாரும் காணப்படவில்லை. ராஜஸ்திரீகள் அந்தப் புரத்திலிருந்து பூஞ்சோலைக்கு வரும் வாசலிருந்த திக்கில் அவர்கள் தங்களது பார்வையைத் திருப்பிப் பார்த்தனர். அவ்விடத்தில் ஒரு லாந்தர்க் கம்பத்திலிருந்த தீபத்தினால், வாசலில் சிறிது வெளிச்சம் உண்டாகிக் கொண்டிருந்தது. இளவரசரும் சாமளராவும் சலவைக்கல் மேடையண்டை இருந்தபடி அந்தப்புரத்து வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.