பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 275 வெளியிடப் போகிறேன்! உன் பக்கத்தில் வந்தால்தான் என் மனம் உண்மையில் ஆனந்தமடைகிறது என்ற விஷயம் ஒருபுறம் இருக்க, இந்த கர்ப்பம் முதிரமுதிர, என் மனசில் பெருகிக் கொண்டிருக்கும் விசனம் உன்னைப் பார்க்கும்போதெல்லாம் அப்படியே பொங்கிப் போகிறது. நான்மகாராஜாவின்வயிற்றில் பிறந்ததை நீ ஒரு பெருத்த பாக்கியமாக மதித்துப் பேசுகிறாய். ஆனால் நானோ அப்படி நினைக்கவேயில்லை. பூர்வ ஜென்மத்தில் நான் செய்த பாவமே என்னை இந்த மகாராஜாவின் வயிற்றில் கொண்டுவந்து போட்டதென்று நினைக்கிறேன்.

மோகனராவ் :- (முற்றிலும் நெகிழ்வாக) ஏன் கண்ணே அப்படி நினைக்கிறாய்?

லலிதகுமாரி:- நான் இந்த மகாராஜாவின் வயிற்றில் பிறந்த பாவத்திற்காகத்தானே, இவர்கள் தங்களுக்கு சமமான ராஜன் எங்கேயிருக்கிறான் என்று தேடிப்பிடித்து அவனுடைய பிள்ளையின் காலில் கொண்டுபோய் கட்டி என்னை மடித்தார்கள். இல்லையானால், நான் உன்னைப் போன்ற சாதாரண மனிதரைக் கலியாணம் செய்துகொண்டு மனமொத்து எப்போதும் சந்தோஷமாக வாழலாமல்லவா? நான் எங்கே பிறந்தேன்? எவ்வளவு தூரத்துக்கு அப்பால் போய் வாழ்க்கைப் பட நேர்ந்தது பார்த்தாயல்லவா! தஞ்சாவூர் மகாராஜாவின் குமாரனை ஒரு காட்டு மிருகமென்றுதான் சொல்ல வேண்டும். வெளிப்பார்வைக்கு மாத்திரம், உடம்பழகும், வார்த்தைகளின் சாமர்த்தியமும் இருக்கின்றன. அவனிடம் நிர்ணயமில்லை; பெருந்தன்மையில்லை; நீதியில்லை. அக்கிரமத்துக்கே இருப்பிடம். பூனா தேசத்திலுள்ள ஒரு பெண்ணை மகா காரியமாகக் கலியாணம் செய்துகொண்டு போய்க் கிளிகளைத் தங்கப் பஞ்சரங்களில் அடைப்பதுபோல, அந்தப்புரத்தில் அடைத்துவிட்டு, தாசிகளையும் வேசைகளையும் கட்டிக் கொண்டு அலைகிறான். அமிதமான செல்வமும், செல்வாக்கும் யாரிடத்தில் இருக்கின்றனவோ, அவ்விடத்தில் மனநிர்ணயம்