பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 - ~ பூர்ணசந்திரோதயம்-4

மோகனராவ்:- உன் தகப்பனார் தேக அசெளக்கியப்பட்டி ருக்கும் இந்தச்சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு இந்தகர்ப்ப விஷயம் தெரிந்தால், அது நிரம்பவும் கெடுதலாக முடியும். ஆகையால், இது தெரியாமல் இருப்பதே நல்லது. ஏனென்றால் உனக்குச் செய்ய வேண்டிய சீமந்தம் முதலிய சடங்குகளைச் செய்யாமல் இதை மறைக்க வேண்டியிருப்பதைப் பற்றி அவர்கள் அதிகமாக விசனப்படுவார்கள். அதனால், உன் தகப் பனாருடைய

வியாதியும் அதிகரிக்கும்.

லலிதகுமாரி:- நானும் அப்படி எண்ணித்தான் அவர்களிடம் நிரம்பவும் ஜாக்கிரதையாக நடந்துகொண்டு வந்திருக்கிறேன். அநேகமாய் அவர்களுக்கு இந்த விஷயம் தெரியாது என்றே நாம் நிச்சயமாக நம்பலாம். இந்தப் பிரசவம் வெளியில் தெரியாதபடி நிறைவேறிப் போய்விடும் என்றே எண்ணுகிறேன்; ஆனால், இனிமேல் இந்தக் குழந்தையை நாம் வைத்துக் காப்பாற்றுவதில் தான் கஷ்டமெல்லாம் இருக்கிறது. நான் இந்த ஊரில் இருக்கும் வரையில் குழந்தையையும் யாராவது வைத்து வளர்ப்பார்கள்; நான் எப்படியும் தஞ்சாவூருக்குப் போக நேரும். அப்போது அதை இங்கே விட்டுப்போகவும் மனம் வராது. அதை அழைத்துக் கொண்டு போகிறதாக வைத்துக்கொண்டால், அங்கே கடைசிவரையில் நம்பக்கூடிய உறுதியான மனிதர்களை நாம் எங்கே தேடிப் பிடிக்கிறது? என்றைக்காவது ஒருநாள் விஷயம் எப்படியும் வெளியாகிவிடும். என்னைத் தொலைப்ப தற்கு ஏதாவது காரணம் அகப்படாதாவென்று எதிர்பார்த்தி ருக்கும் இளவரசனுக்கு இந்த விஷயம் தெரிந்து போகுமானால், அவன் நிர்த்தாrண்யமாக இதை பகிரங்கப்படுத்தி, என்மானம் அழிந்துபோகும்படி செய்து, என்னை விலக்கி இந்த ஊருக்கு அனுப்பிவிடுவான். அப்படி ஊர் சிரிக்கும் படி அவமானம் அடைந்தபின் நான் இந்த உயிரை வைத்திருக்கவே போகிறதில்லை. என் அவமானத்தை என் தாய் தகப்பனார் அறிவார்கள். ஆனால், அவர்களும் உடனே விஷம் தின்று