பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 287 புத்திசாலித்தனத்தை நான் என்னவென்று சொல்லப்போகிறேன்என்றான்.

அப்போது அரண்மனையின் ஹாஜார வாசலிலிருந்த வேலைக்காரன் மணி ஒன்பது அடித்தான்.

அதைக் கேட்ட லலிதகுமாரி சரேலென்று மேடையை விட்டுக் கீழே இறங்கினவளாய், ‘மோகனராவ் நேரமாகிறது; மணி ஒன்பதாகிவிட்டது. நான் இப்போதுதான் வந்தேன் போலிருக்கிறது; எவ்வளவு சீக்கிரத்தில் பொழுது போய் விட்டது. உன்னிடம் வந்தால் என் மனம் எல்லாவற்றையும் மறந்து பரவசமடைந்து விடுகிறது. உன்னிடம் ஒருவிதமான மோகன சக்தி இருக்கிறது. உன் பெயர் சரியான பெயர்தான். நான் போய் வரலாமா? எங்கே எனக்கு உத்தரவு கொடு. என்னை ஒருதரம் அனைத்துக்கொள். ஆசையாகிய தாகத்தினால் என் உடம்பு பறந்து போய் விடும் போல இருக்கிறது’ என்று நிரம்பவும் நைவாக இளகி வாஞ்சையோடு கூறினாள்.

உடனே மோகனராவும் கீழே இறங்கி, ‘கண்ணே உன்னை விட்டு நான் பிரியும் நேரம் வந்துவிட்டதே! இந்தத் தொந்தரவு இல்லாமலே சதாகாலமும் நான் உன்னோடு இருக்கும் காலம் எப்போது வரப்போகிறதோ தெரியவில்லையே. உன் உடம்பு ஸ்திதியில் நாளைக்கு நீ வரமுடியுமோ முடியாதோ. எல்லா வற்றிற்கும் நீ அடிக்கடி உன் தேக நிலைமையை எனக்குத் தெரிவித்துக் கொண்டிரு’ என்று மிகமிகக் கனிவாகக் கூறிய வண்ணம் அவளை மிருதுவாகப் பிடித்தனைத்து, பலமான ஓசையோடு நாலைந்து முத்தங்கள் கொடுத்தான். அந்த ஒசை இளவரசரது காதில் நன்றாகப் பட்டது. அவரது இரத்தம் கொதித்துக் கொந்தளித்து எழுந்தது. தாம் உடனே வெளியில் வந்து அவர்கள் இருவரையும் கொன்று போட்டுவிடலாமா என்று எண்ணினார். -

o,.IV-19