பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 291 இரும்புப் பெட்டியண்டை வந்தபோது அவளது உயிர் அநேகமாய்ப் போய்விட்டதென்றே சொல்ல வேண்டும். தான் இருப்பது அவனுக்குத் தெரிந்தால், அவன் ஒருகால் தன்னையும் பிடித்து விசை வைத்த நாற்காலியில் மாட்டி விடுவானோ என்ற எண்ணத்தினால் தூண்டப்பட்டவளாய் அவள் பேச்சுமூச்சற்று, பக்கத்திலிருந்த பதுமைகளோடு தானும் ஒரு பதுமைபோல அசையாது கண்ணிமையாது நின்று கொண்டிருந்தாள். அந்தத் திருடன் பொருளை அபகரித்துக்கொண்டு சிறிது நேரத்தில் அவ்விடத்தைவிட்டு ஒரே முடிவாகப் போய்விடுவான் என்று அவள் கட்டிலடங்கா ஆவலோடு எதிர்பார்த்திருந்ததற்கு மாறாக, அவன் உள்ளே போய்த் திரும்பி நேராகத் தான் இருந்த இடத்திற்கு வந்து தன்மீது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து தனது வாயில் துணியை அடைத்துக் கைகால்களைக் கட்டித் தூக்கிக் கொண்டு போனது அவளுக்கு முதலில் கனவின் காட்சி போலவும், சிறிதும் நம்பக் கூடாததாகவும் இருந்தது. ஆஜானுபாகுவாகப் பெருத்திருந்த ஒர் அரக்கன் தன்னை ஒரு குழந்தை போல அலட்சியமாகத் தூக்கி மார்பில் சார்த்திக் கொண்டு போனதைக் காண, அவளது மனம் முற்றிலும் தளர்ந்து சோர்வடைந்து மயங்கி விழுந்து போயிற்று. அவள் தனது உடம்பை அப்புறம் இப்புறம் அசைக்கவும் அஞ்சினவளாப் உயிரற்ற பிணம் போல அப்படியே சோர்ந்து கிடந்தாள். திருடனான அந்த அரக்கன் தன்னை எவ்விடத்திற்குக் கொண்டு போவானோ, கொண்டு போய் எவ்விதமான தீங்கிழைப்பானோ என்ற ஒரே எண்ணமும் திகிலும் அவளது மனதில் குடி கொண்டிருந்தன. அவன் பற்பல சந்துகளையும் கடந்து தன்னை எந்தத் திக்கில்கொண்டு போகிறான் என்பதை அவள் நன்றாக கவனித்துக்கொண்டே இருந்தாள். தெய்வச்செயலாக யாராவது மனிதர் குறுக்கிட்டுத்தன்னை விடுவிக்கமாட்டார்களா என்றும் அவளது மனம் எதிர்பார்த்தது. மகா புனிதவதியான ஷண்முக வடிவைத் தான் நம்பவைத்துப் படுமோசத்தில் வீழ்த்தியதைக் கண்டு பொறாமல் தெய்வமே தன்னையும் தனது பெரிய