பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 பூர்ணசந்திரோதயம்-4 தந்தையையும் அவ்வாறு நிரம் பவும் பயங்கரமான தண்டனைக்கு ஆளாக்கி இருக்கிறது என்ற நினைவு அடிக்கடி அவளது மனதில் தோன்றி உறுத்திக்கொண்டே இருந்தது. ஆகையால், அந்தப் பயங்கரமான பெருத்த அபாயத்தி லிருந்து தன்னைக் காப்பாற்றும்படி, கடவுளை நினைத்துப் பிரார்த்திக்கவும் அவளது மனம் கூசியது. அத்தகைய விவரிக்க வொண்ணாத பரமசங்கடமான கொடிய பயங்கர நிலைமையில் லீலாவதி கட்டாரித்தேவனது மார்பின்மீது சாய்ந்திருக்க, கால்நாழிகை நேரத்தில் அவன் தஞ்சைப் பட்டணத்தைக் கடந்து சுமார் ஒரு மைல் தூரத்திற்கு அப்பால் ஆட்டுமந்தை தெரு என்ற இடத்தை அடைந்தான்.

அந்த இடத்தில் வீடுகள் தாறுமாறாகவும் மூலைக்கொன்று மாகவும் அமைந்திருந்தன. எங்கும் இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. அங்கிருந்த வீடுகளில், பெரும்பாலும் கள்ளர்கள் என்ற வகுப்பாரே வசித்து வந்தனர். அவ்விடத்தை அடைந்த கட்டாரித்தேவன் அதிக நெருக்கமாகவும் இருளாக வும் இருந்த ஒரு சந்திற்குள் நுழைந்து, அவ்விடத்தில் காணப்பட்ட ஒரு பெரிய ஒட்டுவீட்டு வாசலையடைந்து, தனது கையிலிருந்த மூட்டையைக் கீழே வைத்துவிட்டு அவசரமாக இரண்டு மூன்று தரம் கதவை லொட்டு லொட்டென்று தட்டினான். சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. உட் புறத்திலும் இருள் அடர்ந்திருந்தது ஆகையால், கதவைத் திறந்தது யாரென்பதை லீலாவதி தெரிந்துகொள்ளக் கூட வில்லை. எங்கும் நிசப்தமும் காரிருளுமே மயமாக நிறைந்திருந்தமையால், லீலாவதியின் திகில் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்து அவளது உடம்பை நடுக்குவித்தது. ஐயோ! தெய்வமே இந்த முரட்டுத் திருடன் என்னை எப்படி இம்சிக்கப் போகிறானோ தெரியவில்லையே! என்ன செய்யப் போகிறேன். ஈசுவரா என்னை இந்தச் சமயத்தில் நீதானப்பா காப்பாற்ற வேண்டும் என்று லீலாவதி பலவாறு எண்ணமிட்டு