பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 பூர்ணசந்திரோதயம்-4

அந்தக் கிழவிக்கு சுமார் ஐம்பது வயது முடிந்திருக்கலாம். ஆனாலும், அவளது உடம்பு குள்ளமாகவும், அம்புபோலப் பாயக்கூடிய சுறுசுறுப்பும், தேகக்கட்டும், கருவேப்பிலைக் குச்சுபோன்ற தோற்றமும் உடையதாகவும் காணப்பட்டது. உடம்பின்தோல் பேரீச்சம்பழத்தின் தோல்போலச் சுருங்கிப் போயிருந்தது. வாயில் பற்களே காணப்படவில்லை. தலையில் இடும்பாவனம் காடுபோலக் காணப்பட்ட செம்பட்டை மயிர் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. கருகமணி, சிவப்புப் பனையோலை, கொப்பு, நாகவடம், தண்டட்டிகை, மூக்குத்தி, பித்தளை மோதிரங்கள், நெளிகள் முதலிய ஆபரணங்கள் அவளது உடம்பை அலங்கரித்துக் கொண்டிருந்தன. அவள் தோற்றத்திலிருந்தே கள்ள ஜாதியைச் சேர்ந்த ஸ்திரீயென்பது எளிதில் தெரிந்தது. அந்தக் கிழவி உடனே நெருங்கி வந்து கீழே விடப்பட்ட லீலாவதியின் வாயிலிருந்த துணிப்பந்தை விலக்கி விட்டுக் கைகால்களிலிருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டவளாய், “ஏம்மா தாவத்துக்கு கொஞ்சூண்டு தண்ணி குடிக்கிறியா?” என்று அன்போடு வினவினாள்.

கட்டுகள் விலக்கப்பட்டதொன்றே லீலாவதிக்குப் பரமசுகமாக இருந்தது. அவள்தனது கைகளையும் கால்களையும் மெதுவாக உதறி உதறி சரிப்படுத்திக் கொண்டாள். அவளது நெஞ்சு முற்றிலும் காய்ந்துபோயிருந்தது. ஆனாலும், முற்றிலும் அநாகரிகமாகக் காணப்பட்ட அந்தக் கிழவியிடத்தில் தண்ணிர் வாங்கிக் குடிக்க, அவளுக்கு அருவருப்பாக இருந்தமையால், அவள் தனக்குத் தாகமில்லையென்று மறுமொழி கூறினாள். அதைக்கேட்ட கிழவி, “சரி, அப்படியானா நீ இந்த விசிப்பலகை மேலே ஏறிப் படுத்துக்க. நான் போறேன் என்று கூறிவிட்டு அப்பால் போய்விட்டாள். விளக்குமாத்திரம் அவ்விடத்தி லேயே வைக்கப்பட்டிருந்தது. லீலாவதி தட்டுத்தடுமாறி மெதுவாக எழுந்து விசிப்பலகையின் மேல் உட்கார்ந்து சுவரில் சாய்ந்துகொண்டாள். அவளது உடம்பின்