பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 305 வுடனே, உண்மையைக் கிரகித்துக்கொண்டு ஒழுங்கான வழியில் நடக்கிறதாக நீ ஒப்புக் கொண்டதைப் பற்றியும் நான் அதிக சந்தோஷமடைகிறேன். இனி எப்போதும் நீயும் நானும் ஒன்றாகவே இருந்து சந்தோஷமாகக் காலங் கழிக்க வேண்டியவர்கள். ஆகையால், உன் மனம் வருந்தும்படியாக, நான் உன்னை இப்போதே கட்டாயப்படுத்தப் பிரியப்பட வில்லை. நீ சொல்லுகிறதுபோல நான் உனக்கு நாளைய தினம் ராத்திரி வரையில் அவகாசம் கொடுக்கிறேன். அதற்குள் நீ உன் மனசை ஒரு மாதிரியாகச் சமாதானப்படுத்திக் கொள். நான் பார்வைக்கு முரடன்போல இருந்தாலும், உன் விஷயத்தில் அப்படி நடந்துகொள்வேன் என்று நீ அஞ்சவே வேண்டாம். உன்னை நான் என் வீட்டுக் குலதெய்வம் போலவே வைத்து நான் உன் தாசானுதாசனாய் நடந்து கொள்ளக் கூடியவன் என்பதை நீ இனி மேல் நடத்தையில் பார்த்துக் கொள்ளலாம். அதைப்பற்றி உனக்குக் கொஞ்சமும் சந்தேகமே வேண்டாம். நீ நாளையதினம் ராத்திரி வரையில் இவ்விடத்திலேயே செளக்கியமாக இரு. இங்கே இருக்கும் பாட்டி உன்னை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டு உனக்குத்தேவையான சகலமான செளகரியங்களையும் செய்து கொடுப்பாள். நானும் நாளையதினம் சாயுங்காலம் வரையில் இதே வீட்டில் முன் கட்டிலேதான் இருக்கப் போகிறேன். அப்படியிருந்தாலும் நீ ஏற்படுத்திய தவணையின் காலம் முடிகிறவரையில் நான் உன்னிடம் வரமாட்டேன். அதுவரையில் நீஎதேச்சையாக இரு’ என்று கூற, லீலாவதி அந்த ஏற்பாட்டை ஒப்புக்கொண்டாள்.

உடனே கட்டாரித்தேவன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டு அவ்விடத்தைவிட்டு அப்பால் போய், கிழவியினிடம் ரகசியமாக ஏதோ சில வார்த்தைகள் சொல்லியபின் அவ்விடத்தை விட்டு லீலாவதி இருந்த இடத்திற்கு வந்து இன்னொருமுறை அவளிடம் செலவு பெற்றுக்கொண்டு முன்

கட்டை நோக்கிச் சென்றான்.