பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 309

இருக்கிறது. வயிறு அவ்வளவு மந்தமாகவும் தொந்தரவாக வும் இருக்கிறது; மத்தியானத்துக்குமேலே வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம்.

கிழவி:- அப்பிடியானா, ஏதாச்சும் பலவாரம் வாங்கியாரட்டுமா?

லீலாவதி:- வேண்டாம் பாட்டீ! சாதமாவது

கெடுதலில்லாதது. பலகாரம் உடம்பை இன்னம் அதிகமாகக் கெடுத்துவிடும். நீங்கள் ஒரு காரியம் வேண்டுமானால் செய்யுங்கள். உங்களுக்குக் கஷ்டமில்லாமல், கொஞ்சம்பசுவின் பாலும் இரண்டு வாழைப்பழமும் வரவழைக்கமுடியுமானால், அவைகளை வேண்டுமானால் சாப்பிட்டுப் பார்க்கிறேன். வேறொன்றும் வேண்டாம்.

கிழவி:- சரி; அப்படியே ஆகட்டும்; பாலும் பளமும் வரவளெச்சுத் தாறேன். கெணத்தாங்கரைக்கி வந்து மொவமாச்சுங் களுவிக்கப் போறியா? அதுவும் வாணாமா? - என்று ஒருவாறு குத்தலாகப் பேசினாள்.

லீலாவதி:- (அதைக் கவனித்தும் கவனிக்காதவள் போலவும் சந்தோஷமாகப் பேசுகிறவள் போலவும் நடித்து) உடம்பு சுத்தம் ஆகவேண்டுமென்றுதானே நான் ஆகாரத்தைக் கூடத் தள்ளுகிறேன். அப்படியிருக்க, கிணற்றண்டை போய் உடம்பை சுத்தம் செய்து கொள்வதை நான் வேண்டாமென்று சொல்வேனா? வாருங்கள், போகலாம். கிணறு எங்கே இருக்கிறது? காட்டுங்கள் என்றாள்.

கிழவி உடனே லீலாவதியை அழைத்துக் கொண்டு பின்பக்கத்திலிருந்த கொல்லைப்பக்கத்திற்குப் போனாள்.

அந்தக் கொல்லை சுமார் பத்தடி அகலம் அறுபதடி நீளமுள்ள காலி நிலமாகக் காணப்பட்டது. அதைச்சுற்றி நாற்புறங்களிலும் சுவர் வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சுவர் இரண்டாள் உயர முடையதாய், உச்சியில் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்