பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 பூர்ணசந்திரோதயம்-4 பெற்றதாயிருந்தது. இரண்டாவது கட்டை அடுத்தாற்போல ஒரு கிணறும், நாலைந்து வாழை மரங்களும் இருந்தன. மதில் சுவர்களுக்கப்பால் மூன்று பக்கங்களிலும் அண்டை வீடுகளின் சுவர்களும் மேற்கூரைகளும் வந்து நெருங்கி இருந்தன. லீலாவதி தனது கடைக்கண் பார்வையை நாற்புறங்களிலும் சுழற்றி அந்த இடத்தின் அமைப்பை நன்றாகக் கவனித்து ஆராய்ச்சி செய்து தான் சுவரில் ஏறுவதற்கே மார்க்கமில்லை என்பதை சுலபத்தில் அறிந்துகொண்டாள். தான் அவ்விடத்திலிருந்து ஓங்கிக் கூச்சலிட்டு அக்கம் பக்கத்திலுள்ள மனிதரினது கவனத்தைக் கவர்ந்து தன்னை அந்த வீட்டார் அக்கிரமாகவும் பலவந்த மாகவும் கொண்டு வந்து அடைத்து வைத்திருப்பதாகக் கூறிப் போலீசாரை அனுப்பும் படி கேட்டுக் கொள்ளலாமா என்ற எண்ணம் அவளது மனதில் அடிக்கடி எழுந்து அவளைத் தூண்டியது. அவ்வாறு கூச்சலிடமாட்டாமல், ஒருவித வெட்கமும், லஜ்ஜையும் எழுந்து அவளது தொண்டையை இறுகப் பிடித்துக்கொண்டன. ஆனாலும், தனது மானமும், பிராணனும் போகத்தக்க அத்தகைய அபாய சமயத்தில் தான் நாணிப் பின்வாங்குவது உசிதமல்லவென்ற எண்ணம் அவளை அடிக்கடி இடித்திடித்து ஊக்கிக்கொண்டே இருந்தது. ஆனாலும், அவள் அவ்வாறு செய்யாமல் மெளனமாகவே இருந்தாள். தான் அந்த வீட்டின் மற்ற பாகங்களையும் நன்றாக ஆராய்ச்சி செய்து, வேறு வழியாக சுலபத்தில் தப்பித்துக்கொள்ள இயலுமானால், அப்படிச் செய்வதே யுக்தமானதென்றும், அன்றையதினம் மாலைக்குள் தான் எவ்வளவோ அரிய காரியங்களைச் செய்துவிடலாமென்றும் எண்ணிக் கொண்டாள். தன்னைத் தூக்கிக் கொண்டு வந்த முரட்டு மனிதன் முதல் கட்டில் இருப்பதாகச் சொன்னது பொய் என்றும், அவன் அப்போது அந்த வீட்டில் இல்லையென்றும் அவள் எளிதில் உணர்ந்து கொண்டாள். எவ்வாறெனில், அவனிருந்தால், பொழுது விடிந்து அவ்வளவு நேரமாயிருந்தும், அவன்முகம் சுத்தி செய்து