பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 பூர்ணசந்திரோதயம் -4 லீலாவதி:- அவர் வேறே ஏதோ ஒர் ஊருக்கு என்னை இன்றையதினம் ராத்திரி அழைத்துக் கொண்டு போகப் போறதாகச் சொன்னாரே! அது எந்த ஊர் 2 அங்கே யார் இருக்கிறது? இவர் அங்கே இருக்கிறதா, அல்லது, இங்கே இருக்கிறதா?

கிழவி:- எங்களோட சொந்த ஊரு காசாநாடு. அது இந்த ஊருக்குப் பத்துப் பதினைஞ்சு கல்லுக்கு அப்பாலே இருக்குது. அங்கிட்டு எங்களுக்கு பெரிய ஊடு கீடெல்லாம் இருக்குது; எம் பேராண்டிக்கி இன்னம் மூணு பொஞ்சாதி மாருங்க அங்கிட்டு இருக்கிறாளுவ. இந்த ஊருலெ எம்பேராண்டி அப்பப்ப ஏதாச்சும் அலுவலா வந்தா, தங்கறதுக்காவ, இந்த ஆட்டே வாங்கி, இதுலெ என்னெக் கொண்டாந்து வச்சிருக்கிறான். அவன் எப்ப பாத்தாலும் இஞ்கேதான் இருப்பான். இனிமேலே ஒன்னே அங்கிட்டுக் கொண்டே வச்சா. இஞ்கே அவன் வருவானோவரமாட்டானோ இன்னமே சந்தேகந்தான்.

லீலாவதி:- ஒகோ! சரிதான். அப்படியானால் அவர் இப்போது அந்த சொத்து மூட்டையை எடுத்துக்கொண்டு அந்த ஊருக்குத் தான் போயிருக்கிறார் போலிருக்கிறது?

கிழவி: அவன் ராத்திரியே அந்த மூட்டையைக்கொண்டு போயி ஊருலெ பத்திரப்படுத்திபுட்டு இருட்டோடெய வந்துட்டானே. வந்தவன் அலுத்துப்போயி மொதக்கட்டுலே படுத்துத்துங்கறான்.

லீலாவதி:- அவர் இன்னமும் தூங்கினால் எப்போது சாப்பிடுகிறது? இப்போது நடுப் பகல் ஆயிருக்கும் போலிருக்கிறதே!

கிழவி:- அவன் இம் பிட்டுக் காலையிலேயே சோறு தின்னுட்டானா, அடியாத்தேங்கறேன். அவஞ் சோறுதிங்க, உருமவேளை களிஞ்சு சரியா அஞ்சுநாளிப் பொழுது ஆக வானாமா என்றாள்.