பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 3.13 லீலாவதி அதற்குமேலும் தான் கேள்விகளைக் கேட்டுக் கொண்டேபோனால், அவள் ஒருவேளை தன்னைப்பற்றிச் சந்தேகம் கொள்வாளென்று நினைத்தவளாய் அவ்வளவோடு தனது வாயை அடக்கிக்கொண்டாள்.

இருவரும் மறுபடி இரண்டாங் கட்டை அடைந்தனர். ஆனால், கிழவி இரண்டாங்கட்டின்கதவைச்சாத்தி உட்புறத்தில் அதைப் பூட்டித் திறவுகோலைத் தனது இடுப்பில் சொருகிப் பத்திரப்படுத்திக் கொண்டு வந்து சேர்ந்தாள். அதைக் கண்ட லீலாவதி, கிழவி வெளிப்பார்வைக்கு அஜாக்கிரதையாக இருப்பவள்போலக் காணப்பட்டாலும், உள்ளுறக் கபடமும் எச்சரிப்பும் நிறைந்தவளென்று நிச்சயித்துக் கொண்டவளாய், அவள் செய்த காரியத்தைக் கவனிக்காதவள் போல உள்ளே போய் விசிப்பலகையின் மேல் உட்கார்ந்து கொண்டாள்.

கிழவி அரை நாழிகை நேரம் வரையில் வேறு ஏதோ அலுவல்களைச் செய்வதில் தனது கவனத்தைச் செலுத்தி இருந்தவளாய், அதன்பிறகு தனது கையில் ஒரு வெண்கல லோட்டாவை எடுத்துக்கொண்டு லீலாவதிக்கு அருகில் வந்து நின்று, ‘அம்மா! நான் போயி ஒனக்குப் பாலும் பழமும் வாங்கியாறேன். இதோ ஒரு எட்டுலேதான் கடை இருக்குது, அங்கிட்டு பளம் விக்குது, பக்கத்து ஊடு எடையர் ஊடு; பாலு அங்ஙனே,அம்பிடும். வாங்கிக்கிட்டு இதோ ஒரு சணநேரத்திலே ஒடியாரேன். எம்பேராண்டி ஒன்னெச்சாக்கிருதயாப்பாத்துக்கச் சொல்லிபுட்டுத் தூங்கறான். நான் கொல்லெக் கதவெப் பூட்டி வச்சிருக்கறேன். இப்ப இந்த ரெண்டாங்கட்டுக் கதவெயும் அப்பாலே பூட்டிகிட்டுப்போறேன். நீ பயப்படாமே இங்கிட்டுக் குந்தியிரு. இதோ ஒடியாந்துட்றேன்’ என்று கூற லீலாவதி தனியாக இருப்பதைப்பற்றி அஞ்சுகிறவள் போல நடித்து, “ஏன் பாட்டி அவர்தான் முன் கட்டில் இருக்கிறாரே இந்தக் கதவை ஏன் பூட்டவேண்டும்? நீங்கள் வெளியில் போய் வாசல் கதவைப் பூட்டிக்கொண்டு போகிறதுதானே என்றாள்.