பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பூர்ணசந்திரோதயம் - 4 செய்தேன். எதுவும் பலிக்கவில்லை. அவளுடைய மனசு அம்மணி பாயி குறிப்பிட்ட பையன் மேலேயே போய் லயித்துப் போயிருக்கிறது. தான் அவனை இழந்து விடும்படி நேர்ந்ததைப் பற்றிய நினைவே நினைவாகக் கொண்டு அவள் சதாகாலமும் அதே விசனத்தில் ஆழ்ந்திருக்கிறாள். அதுவுமல்லாமல் தன்னுடைய அக்காளான கமலம் எப்போது வருவாள் என்றும், இன்றைய தினம் அவளை நீங்கள் அழைத்து வருவீர்களென்றும், இவ்வளவு நேரமாக நீங்கள் திரும்பி வராத காரணமென்ன என்றும், அவள் என்னிடம் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கிறாள். அவள் மகா சுத்தமான மனமுடைய உத்தம ஜாதி ஸ்திரீ. சிற்றின்ப சுகமென்றால் என்னவென்பதே அவளுக்குத் தெரிந்திருக்காது என்று நான் நினைக்கிறேன். இந்த நிலைமையில் அவளிடம் இந்த விஷயத்தை எப்படி வெளியிடுகிறது என்பதே எனக்குத் தெரியவில்லை. நானும் சூட்சுமமான சில சொற்களை அடிக்கடி உபயோகித்தும் பார்த்தேன். அந்த வார்த்தைகளைக் காதால் கேட்பதும் அவளுக்கு அருவருப்பாக இருக்கிறது. அந்த வார்த்தைகளை அவள் கவனிப்பதும் இல்லை; அவைகளுக்கு மறுமொழி சொல்வதும் இல்லை. இப்படிப்பட்ட மனநிலைமையிலுள்ள பெண்ணை நீங்கள் இப்போது வசப்படுத்துவது முடியாது. பலவந்தம் செய்து வசப்படுத்தினாலும், அதில் உங்கள் மனசுக்கு அதிக சந்தோஷமும் சுகமும் ஏற்படுமென்று நான் நினைக்கவும் இல்லை’ என்றாள். o

அவ்வாறு அவள் மறுமொழி சொல்வாளென்று ஜெமீந்தார் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆகையால், அவள்மீது கோபமும் அருவருப்பும் அடைந்து, ‘என்ன லீலாவதி இவ்வளவுதானா உன்னுடைய சாமர்த்தியம்; நீ இப்படி மோசம் செய்வாயென்பது முன்னமே தெரியாமல் போய்விட்டது; தெரிந்திருந்தால், நான் வேறே ஏற்பாடுகள் செய்து இந்நேரம் அவளுடைய மனசைத்