பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 - பூர்ணசந்திரோதயம்-4 அந்த மாளிகையின் முன்பக்கம் ஒரு சிறிய பூங்காவைக் கொண்டதாகவும், நிரம்பவும் கம்பீரமான தோற்றமுடைய தாகவும் இருந்தது. வாசலில் டாலிடவாலிகள் முதலிய பெரிய மனித சின்னங்கள் அணிந்திருந்த ஒரு சேவகன் வாசலில் காவல் காத்து நின்றான்.

லீலாவதி குதிரை வண்டியை விட்டுக் கீழே இறங்கி, அவனிடம் நெருங்கி, “ஏனப்பா! எஜமான் உள்ளே இருக்கி றார்களா?’ என்று நிரம்பவும் விநயமாக வினவினாள்.

அவளது தோற்றத்திலிருந்து அவள் யாரோ பெரிய மனிதர் வீட்டுப் பெண்ணென்று நினைத்து நிரம்பவும் வணக்கமும் மரியாதையும் தோற்றுவித்தவனாய், ‘அம்மணி எஜமான் உள்ளேதான் இருக்கிறார்கள். ஏன், அவர்களைப் பார்க்க வேண்டுமா? அவர்கள் போஜனம் செய்துவிட்டு அரை நாழி கைக்கு முன்னேதான் படுத்துக்கொண்டார்கள். அவர்கள் பகல் வேளையில் அவ்வளவு கடுமையாகத் துரங்குகிறதில்லை; கண்ணை மூடிக்கொண்டு கொஞ்சநேரம் சும்மா படுத்து அலுப் பாறுவது வழக்கம். நான் போனால் விழித்துக் கொள்வார்கள். வாருங்கள் நான் உங்களை உள்ளே அழைத்துக் கொண்டு போகிறேன்’ என்றான் சேவகன்.

லீலாவதி உடனே உள்ளே நுழைய சேவகன் அவளுக்கு வழி காட்டிக்கொண்டு முன்னால் நடந்து சென்றான். அவர்கள் பல வாசல்களையும் மண்டபங்களையும் கடந்து மேன்மாடப் படிகட்டின் வழியாக உப்பரிகையை அடைந்து, அவ்விடத்திலி ருந்த ஒரு கொலு மண்டபத்திற்குள் நுழைந்தனர். உடனே சேவகன், ‘அம் மணி! நீங்கள் கொஞ்ச நேரம் இப்படியே இருங்கள். இதோ பக்கத்திலிருக்கும் அறையில் எஜமான் இருக்கிறார்கள். நான் போய் முதலில் சொல்லிவிட்டு அதன்பிறகு வந்து உங்களை அழைத்துக்கொண்டு போகிறேன். ஆனால் நீங்கள் யாரென்று அவர்கள் கேட்டால், நான் என்ன சொல்லுகிறது?’ என்றான். உடனேலிலாவதி, ‘அப்பா நீ போய்