பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 323 எஜமானர் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒரு காரியமாய்ப் போய்க் கொண்டிருக்கிறாரே. அது விஷயமாகப் பேச வேண்டுமென்று ஒர் அம்மாள் வந்திருப்பதாகச் சொல். அதுவே போதுமானது’ என்றாள். அதைக் கேட்டுக்கொண்டு உடனே சேவகன் அவ்விடத்தை விட்டுப் போய்விட்டான்.

தனியாக விடப்பட்ட லீலாவதி தனது பார்வையை அவ்விடத்திலிருந்த படங்களின் மீது செலுத்தினாள். எதிர்பக்கத்துச்சுவரில் ஓர்ஆள் உயரம் எழுதி மாட்டப்பட்டிருந்த ஒரு படம் உடனே அவளது கவனத்தைக் கவர்ந்து கொண்டது. அந்தப்படம் தனது காதலரும், வெந்நீர்அண்டாவிற்குள்ளிருந்து இறந்து போனவருமான ஜெமீந்தார் இராமலிங்கம் பிள்ளையின் உருவப்படம் என்பதை அவள் உடன்ே உணர்ந்து கொண்டாள். அது அந்த மனிதர் உயிரோடு சிரித்துக்கொண்டு நிற்பதுபோல எழுதப்பட்டிருந்தது. ஆகையால், அதைப் பார்த்தவுடனே லீலாவதியின் மனதில் பழைய நினைவுகளெல்லாம் காட்டாற்று வெள்ளம் போலப் பொங்கி எழுந்தன. அவரை நேரில் கண்டதனால் உண்டான பெருத்த இன்பமும் அவர் அநியாயமாக இறந்துபோய் விட்டதைப் பற்றிய சகிக்க வொண்ணாத அபரிமிதமான துயரமும் மாறி மாறி எழுந்து அவளது மனத்தை உலுப்பிப் புண்படுத்தின. அவள் அவரிடம் கொண்டது கள்ள நட்பானாலும், அவள் அவரைத் தனது உயிரிலும் அதிக அருமையாகக் காதலித்து அவரிடம் அளப்பரிய வாஞ்சையும் பிரேமையும் கொண்டிருந்தவள். ஆதலால், அவரது தேஜோ மயமான வடிவத்தைக் காணவே, அவளது மனதும், தேகமும் பதறித்தவித்தன. கடைசியில் அவர் வெந்நீர் அண்டாவிற்குள் மறைந்துகொண்ட காலத்தில் அவருக்கு நேரிட்ட பயங்கரமான முடிவை நினைக்க நினைக்க, அவளது உடம்பு கிடுகிடென்று நடுங்கியது. அவர் நூலேனியின் வழியாக மேன்மாடத்தில் ஏறி வருவதுபோலவும் தன்னோடு ஸ்ரஸ் சல்லாபம் புரிவதுபோலவும், வேறு பலவாறாகவும்