பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 பூர்ணசந்திரோதயம்-4 அவளது அகக்கண்ணில் பழைய காட்சிகள் தோன்றவே, அவள் தன்னையும் உலகையும் மறந்து அந்த நினைவுகளில் ஆழ்ந்தவளாய் இருக்க அடுத்த rணத்தில் நீலமேகம் பிள்ளை அவளுக்கு முன் தோன்றவே அவள் திடுக்கிட்டுத் தனது சுய உணர்வை அடைந்தாள்.

நீலமேகம்பிள்ளை என்பவர் சுமார் இருபத்திரண்டு வயதடைந்த வசீகரமான அழகுடைய நற்குண புருஷரென்பது முன்னரே சொல்லப்பட்ட விஷயம். தோற்றத்தில் அவர் தமது தகப்பனாரைப் போலவே இருந்தார். ஆதலால், லீலாவதி சிறிது நேரம் வரையில் பிரமித்துப்போய் ஒய்ந்து நின்றுவிட்டாள். தனக்கெதிரில் உயிர் வடிவம் போலத் தோன்றிய படத்திலிருந்த மனிதரேதிரும்பவும் யெளவன பருவமடைந்து அவ்வாறு வந்து நிற்கிறாரோ என்று அவள் ஒருவித மனப்பிராந்தி அடைந்த வளாய் நின்றாள். .

நீலமேகம் பிள்ளை அதற்குமுன் லீலாவதியைப் பார்த்தவரல்ல என்பது வாசகர்கள் அறிந்த விஷயம். தாம் போலீஸ் இன்ஸ் பெக்டரிடம் போய்க் கொண்டிருக்கும் விஷயமாகப் பேசஓர் அம்மாள் வந்திருப்பதாக வேலைக்காரன் சொன்னதைக் கேட்ட அந்த யெளவன புருஷர் பெருத்த வியப்பும் கலக்கமும் அடைந்து, அப்படி வந்திருப்பவள்யாராக இருக்கலாம் என்று நினைத்துப் பார்த்து, இன்னாள் என்பதை உணர மாட்டாமல் திகைப்பே வடிவாக அவ்விடம் வந்தவர். ஆதலால், யெளவன பருவமும், கட்டழகும், உயர் குலத் தோற்றமும் ஜ்வலிக்க அப்ஸ்ர ஸ்திரீபோல வந்து நின்ற லீலாவதியைக் காணவே, அந்த வடிவழகர் மிகுந்த லஜ்ஜையும் பிரமிப்பும் அடைந்தவராய், அவள் யாராக இருப்பாள் என்ற சந்தேகம் நிறைந்தவராய்ச் சிறிது நேரம் வெட்கித் தயங்கி நின்றார். பரஸ்பரம் இருவரும் ஒருவரை ஒருவர் ஏறிட்டுப் பார்க்கவும் ஒருவரோடொருவர்வாய்விட்டுப் பேசவும் நாணிப் பின் வாங்கினர்.