பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 பூர்ணசந்திரோதயம்- 4

அதைக் கேட்டவுடனே லீலாவதியின் உடம்பு சேரர்வும் துயரமும் அடைந்தது. அவளது கண்களிலிருந்து கண்ணிர் பொங்கி மளமளவென்று இரண்டு கன்னங்களிலும் வழிந்தது. எதிரிலிருந்த படத்தைப் பார்த்தமுதல் அவளது மனதில் பொங்கி எழுந்து தேங்கிக் கிடந்த விசன வெள்ளம் அவளை மீறிக் கொண்டு வெளிப்பட்டது. அவள் கலங்கி விம்மி விம்மி அழத் தொடங்கி, “ஐயா! அந்ததுக்ககரமான விஷயத்தை நான் எப்படி வெளியிடப் போகிறேன். அவர் உயிரோடிருந்தால், இத்தனை மாசகாலமாக இங்கே வராமல் ஒளிந்துகொண்டா இருப்பார். அவர் இறந்துதான் போய்விட்டார்’ என்று தழுதழுத்த குரலில் கூறினாள். -

நெடுங்காலமாகத் தமது தந்தையைக் காணாது விசனக்கடலில் ஆழ்ந்து துயரமே வடிவாக இருந்த நீலமேகம் பிள்ளை லீலாவதியின் அழுகையையும் கண்ணிரையும் கண்டு அவள் வெளியிட்ட செய்தியையும் கேட்கவே, அவர் அப்படியே உருகி உட்கார்ந்து போய்விட்டார். அவரது மனதும் கண்களும் கலங்கிப் போயின. கண்களிலிருந்து கண்ணிர் அருவி பெருக் கெடுத்தது. அவரது கைகால்களெல்லாம் வெடவெட வென்று நடுங்க ஆரம்பித்தன. அவர் கட்டுக்கடங்காத் துயரத்தோடு, “ஆகா! என் தகப்பனார் இறந்தா போய்விட்டார் ஐயோ! இனி நான் என்ன செய்யப் போகிறேன்! இனி நான் மறுபடியும் அவரை உயிரோடு கண்டு அவரிடம் ஒரு வார்த்தை யாவது பேசப் போகிறேனா ஆகா! தெய்வமே! உன்னுடைய திருவுள்ளம் இப்படியா இருந்தது எவ்வளவோ அபாரமான செல்வத்தையும் செல்வாக்கையும் அளித்த நீ ஆயுசை மாத்திரம் அற்பு ஆயுசாகவா ஏற்படுத்தினாய்’ என்று கூறித் தமது கைகளால் முகத்தை மூடிக்கொண்டு பலவாறு பிரலாபித்து விசனித்துக் கலங்கிச் சிறிதுநேரம் கண்ணிர் விடுத்தபிறகு, மெதுவாக லீலாவதியை நோக்கி, ‘அம்மா இந்தச் சங்கதி உங்களுக்கு யார் மூலமாக எப்போது தெரிந்தது? என்தகப்பனார்