பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 31

அதைக்கேட்ட லீலாவதி, “ஐயோபாவம்! மணிப்புறாவைப் போல எவ்வளவோ மிருதுவாகவும் சொகுசாகவும் இருக்கும் அந்தப் பெண்ணை அப்படிப்பட்ட மகா கொடுமையான நாற்காலியிலா மாட்டச் சொல்லுகிறீர்கள் அதை நினைக்கும் போதே எனக்குக் குலை நடுக்கம் உண்டாகிறதே! என்ன செய்வேன்! இந்த ராத்திரிக்குள் அவளை வசப் படுத்தியே தீரவேண்டுமா? இன்னம் இரண்டொருநாள் பொறுக்கக் கூடாதா? அதற்குள் அவளை சந்தோஷப்படுத்தி நயமாகவே அவளுடைய மனசைத் திருப்பிப் பார்க்கலாமே! இதெல்லாம் தானாகக் கனிந்து வருவதே சுகமென்பது உங்களுக்குத் தெரியாததல்ல. நீங்கள் இன்றைய தினமே இதை முடிக்க எண்ணுவது தடியாலடித்துக் கனியவைப்பதுபோல ஆகுமே

அன்றி வேறல்ல’ என்றாள்.

அதைக் கேட்ட ஜெமீந்தார் நிரம் பவும் கோபங்கொண்டு கடுகடுத்த முகத்தோடு பேசத் தொடங்கி, “எனக்குத் தெரியாத புத்திமதியை நீ சொல்லுகிறாய் போலிருக்கிறது. உன்னைப் போல எனக்கு மூன்று மடங்கு வயசாகிவிட்டது. இந்தப் பெண்ணைப் போலவும் உன்னைப் போலவும் லகேrாபலகrம் பெண்களை நான் பார்த்தாய் விட்டது. எத்தனையோ தினுசான மனப் போக்குள்ளவர்கள் என் வசத்தில் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய குணங்களையும், மனக் கோணல்களையும் நான் எத்தனையோ விதத்தில் திருத்திச் சரிப்படுத்தி இருக்கிறேன். ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் என்றும், பாடுகிற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும் என்றும், ஜனங்கள் பழமொழி சொல் வார்கள். அதுபோல, நயத்தில் வெல்லக் கூடியவளும் இருக்கிறாள். பயத்தில் வெல்லக் கூடியவளும் இருக்கிறாள். நாம் எல்லோரையும் தானாகக் கனியும்படி செய்துதான் அடைய வேண்டும் என்பது என்ன கட்டாயமோ தெரிய வில்லை. இன்றையதினம் நாம் இவளைக் கட்டாயப்படுத்துவதில்

5.3.; V-3