பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பூர்ணசந்திரோதயம்-4 ஆதலால், அவ்விடத்திலிருந்த அறுபத்து நான்கு லீலைக் கட்டில்களும் அசங்கியமான படங்களும் மற்றும் காமாந்தகாரம் நிறைந்த காட்சிகளும் ஷண்முகவடிவின் திருஷ்டியில் படாமல் இருந்தன. முன்னால் சென்ற லீலாவதி விளக்கு இல்லாததைப் பற்றி நிரம்பவும் கோபம் கொண்டவள்போல நடித்து, ‘என்ன அநியாயம் இது வேலைக்காரர்கள் இந்த வழியில் விளக்கே கொளுத்தவில்லையா? அல்லது, கொளுத்திய விளக்கு அணைந்து போய்விட்டதா என்பது தெரியவில்லையே! இந்த இடம் விளக்கில்லாமல் ஒரு நாளும் இருந்ததில்லை. வேலைக்காரர்கள் அசிரத்தையினால் இன்றைய தினம் இப்படிச் செய்திருக்கிறார்கள். என்தமயனார் இங்கே வந்திருப்பாரானால் அவர் இந்நேரம் நிரம்பவும் கோபித்துக் கொண்டு இதைச் செய்ய வேண்டிய வேலைக்காரனை வேலையிலிருந்து விலக்கியிருப்பார். ஷண்முகவடிவூ! பக்கத்திலுள்ள பூச்செடிகளில் இடரி நீ கீழே விழுந்தாலும் விழுந்து விடுவாய். ஆகையால், நீ என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு மெதுவாக நடந்து வா; எங்கே? இப்படி வந்து என் கையைப் பிடித்துக்கொள்’ என்று நயமாகக் கூறியவண்ணம் சடக்கென்று நின்று திரும்பித் தனது கையை நீட்ட அவள் சொன்ன பொய் முகாந்திரத்தை உண்மையென்றே நினைத்துக் கொண்ட சுத்தஸ்வரூபிணியான ஷண்முகவடிவு தனது இடது கையை நீட்டினாள். லீலாவதி அதை மெதுவாகப் பிடித்து அவளை அழைத்துக் கொண்டு மெல்லமெல்ல நடந்து ரதிகேளி விலாசத்தின் மத்திவரையில் சென்றாள். சென்றவள் இருளில் திக்குத் திசை தெரியாமல் மோதிக் கொள்ளுகிறவள் போல, எதிரிலிருந்த மேஜையின்மீது முட்டிக்கொண்டு அதனால் உண்டான நோவைப்பொறுக்கமாட்டாமல் தவிப்பவள் போலத் துடித்து ஒருவாறு ஆத்திரமடைந்து, ‘அடாடா! மணிக்கட்டில் மேஜை நன்றாகப் பட்டு விட்டது முட்டாள்கழுதை விளக்கைக் கொளுத்த மறந்துபோய் விட்டான். அதனால் நமக்கு இப்போது நிரம்பவும் உபத்திரவமாக இருக்கிறது. இதுதான் கமலத்தினு