பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 57 உங்களைப் போன்ற உல்லாஸ் புருஷர்களையே நம்பியிருப் பார்கள் ஆகையால், நீங்கள் அப்படிப்பட்ட இடங்களை நாடிச் செல்வதே தகும். அன்றி எங்களைப் போன்ற குடும்ப ஸ்திரீகளை அநியாயமாகக் கெடுக்க முயன்று பெரும் பாவத்தை ஏன் சம்பாதித்துக்கொண்டு ரெளரவாதி நரகத்துக்குப் போக அருகராகிறீர்கள்? வேண்டாம்; இவ்வளவோடு என்னை விட்டு விடுங்கள். வேண்டுமானால் நீங்கள் விடுவித்த நிமிஷத்திலேயே நான் வெளியில் போய்விடுகிறேன். என்று கொஞ்சலாகவும், பயமுறுத்தலாகவும் விசைகளின் உபத்திரவத்தைச் சகிக்க மாட்டாமல் மரணவேதனைப் பட்டும் கூறினாள்.

அதைக்கேட்ட மருங்காபுரி ஜெமீந்தார் அவளது பிடிவாதத் தினால் தமது காமாந்தகார எண்ணம் நிறைவேறாமல் தாமதப் படுவதைக் கண்டு சிறிதும் பொறாதவராய் ஷண்முகவடிவின் பக்கத்தில் வந்து நின்று, ‘நீ இந்நேரம் பேசியது எல்லாம் என் காதில் படவுமில்லை; இனி படப் போகிறதும் இல்லை ஆகையால், நீ இந்தப் பழைய கதையை எல்லாம் மூட்டையாகக் கட்டி தூரத்தில் வைத்துவிடு. உன்னைப்போல எத்தனையோ பெண்கள் இந்த நாற்காலியில் மாட்டிக்கொண்டு நீ பேசியதைவிட அதிக அழகாக வேதாந்தப் பிரசங்கம் செய்திருக்கிறார்கள். உன்னுடைய அக்காள் உனக்கு மேல் பத்து மடங்கு அதிக கோபமாகவும் ஆத்திரமாகவும் பேசினாள். முடிவில் எதுவும் பயன்படவில்லை. நீ யாருடைய சம்சாரமாகவாவது இருந்தால், நான் உன்னை உபத்திரவிக்கக் கூடாது. உன் கற்பை அழிக்கக் கூடாது. நீயோ கலியாணமாகாத கன்னிகாப் பெண், உன்மேல் பல புருஷருந்தான் ஆசைப் படுவார்கள்; உன்னைக் கட்டிக்கொள்ள வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள்; அப்படிச் செய்வது குற்றம் என்று யாரும் சொல்லமாட்டார்கள். கன்னிகாப் பெண்களுக்கும் தாசிப் பெண்களுக்கும் வித்தியாசமே இல்லை. ஆகையால், நீ அநாவசியமாகப் பேசி மனசை ஏன் அலட்டிக் கொள்ளுகிறாய்?