பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 6i ஆவலோடும் பாய்ந்து அவளைக் கட்டிப்பிடித்துத் துக்க முயல அந்தச் சமயத்தில் தடதடவென்று ஒரு விபரீதமான ஓசை கேட்டது. அங்கே போடப்பட்டிருந்த கட்டிலின் அடியிலிருந்து ஒரு மனிதன் குபிரென்று வெளிக் கிளம்பி வந்து, மருங்காபுரி ஜெமீந்தாரின் மீது பாய்ந்து, ஷண்முகவடிவை இழுத்து ஒரு பக்கமாகப் படுக்கவைத்துவிட்டு, கிழவரைக் குண்டுகட்டாகத் தூக்கி ஷண்முகவடிவு இருந்த நாற்காலியில் திடீரென்று விட்டெறிய, அதன் விசைகள் கலீரென்று கிளம்பி கிழவரை இறுகப் பிடித்துக் கொண்டன. மேற்சொன்ன விஷயமெல்லாம் மின்னல் மின்னி மறையும் நேரத்தில் நிகழ்ந்தது. ஆகையால், ஜெமீந்தார் பிரமித்து ஸ்தம்பித்து திகிலே வடிவாய் நிமிர்ந்து அப்படி வந்த மனிதன் யார் என்று பார்க்க, அந்த மனிதன் ஆஜானுபாகுவாய் கடோத்கஜன் போல பிரம்மாண்டமான ஸ்வரூபத்தோடு காணப்பட்டான். அவன் தனது முகத்தின் அடையாளம் தெரியாதபடி ஒரு குல்லாவை அணிந்து கொண்டிருந்தான் ஆகையால், அதில் விடப்பட்டிருந்த இரண்டு துளைகளின் வழியாக அவனது கண்கள் மாத்திரம் வெளியில் தெரிந்தனவே அன்றி, முகத்தின் மற்ற பாகம் குல்லாவில் மறைந்திருந்தது. அந்த விகார ரூபத்தைக் கண்ட கிழவர் மதிமயங்கிக் கதிகலங்கி பிரமித்து ஸ்தம்பித்து அசைவற்று ஆடுதிருடினகள்ளனைப் போல விழித்து நிரம்பவும் வெட்கி அப்படியே இடிந்து உட்கார்ந்து போனார்.

34-வது அதிகாரம்

மர்மத்தின் மேல் மர்மம்

கோலாப்பூர் சிறைச்சாலையில் அடைபட்டிருந்த கலியாண சுந்தரத்தின் மனநிலைமையை உள்ளபடி விவரித்துச் சொல்வது நிரம் பவும் அரிதான காரியம் என்றே சொல்ல வேண்டும். இந்திராபாயி என்ற பொய்ப் பெயருடன் தனது அறைக்கு வந்து