பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 பூர்ணசந்திரோதயம்-4 கடிதம் எழுதி தஞ்சையிலுள்ள ஷண்முகவடிவின் அக்காளான கமலத்திற்கு அனுப்பிவைத்தால், அவள் உடனே திருவாரூ ருக்கு மனிதரை அனுப்பித் தனது தங்கை அவ்விடத்தில் இருக்கிறாளா என்பதையும், அல்லது தனது rேமத்தைப்பற்றி அவ்விடத்துக்கு ஏதேனும் கடிதம் எழுதியிருக்கிறாளா என்பதையும் தெரிந்துகொண்டு, அவசியமானால், உடனே புறப்பட்டுக் கோலாப்பூருக்கு வருவாள் என்றும் கலியான சுந்தரம் ஒருவாறு முடிவு செய்து கொண்டவனாய்த்தனக்கருகில் உட்கார்ந்திருந்த வைத்தியரைப் பார்த்து நயமாகப் பேசத் தொடங்கி, “ஐயா! நீங்கள் இவ்விடத்திலுள்ள கைதிகளுக்கு ஏதாவது உதவிசெய்தால், அது சட்டவிரோதமான காரியம் என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், அது தர்ம நியாயத்துக்கு ஒத்த காரியமல்ல என்பதை மாத்திரம் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்விடத்திலுள்ள கைதிகள் எல்லாம் நியாயமான வழியில் தண்டிக்கப்பட்டு இவ்விடம் வந்திருந்தவர்களாக இருந்தால், அவர்களுக்கு உதவி செய்வது சட்ட விரோதமாவதோடு தர்ம நியாயத்துக்கும் விரோதமாகும். அப்படியின்றி, ஒரு மனிதர் அநியாயமாகக் கொணர்ந்து அடைக்கப்பட்டிருந்தால், அவருக்கு உதவி செய்வது சட்ட விரோதமானாலும் நியாய விரோதமாகாது. என்னை இவர்கள் எவ்விதக் குற்றமும், விசாரணையுமின்றி அக்கிரமமாகக் கொணர்ந்து இங்கே அடைத்திருப்பதன்றி மேன்மேலும் தகாத காரியங்களை எல்லாம் செய்துகொண்டே இருக்கிறார்கள். அந்த விவரங்களை எல்லாம் நீங்கள் கேட்பீர்களானால், என் விஷயத்தில் நிரம்பவும் இரக்கம் கொள்வீர்கள் என்பது நிச்சயம். அவைகளை எல்லாம் சொல்லலாமானால் சொல்லுகிறேன். எனக்கு நீங்கள்அதிகமாக எந்த உதவியையும் செய்யும்படி நான் உங்களை உபத்திரவிக்க விரும்பவில்லை. தஞ்சாவூரிலுள்ள எனக்கு நிரம் பவும் அந்தரங்கமான ஒரு மனிதருக்கு நான் ஒர் அவசரக் கடிதம்