பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 77

அவனுக்குத் தேவையான ஆகாரம் தண்ணிர் முதலியவற்றை உதவிவிட்டுப் போய்க் கொண்டிருந்தாள். அவ்வாறு சில தினங்கள் கழிந்தன. அவள் வைத்தியரோடும் தனியாகவும் வந்த காலங்களில் வாய் திறந்தே பேசாமல் இயந்திரத்தினால் அசையும் உயிரற்ற பதுமைபோல வருவதும், தான் செய்ய வேண்டிய அலுவல்களை ஒழுங்காக முடிப்பதும், காலப்படி வெளியில் போய்விடுவதுமாக இருந்தாள்.

அவளது செய்கைகளைக் கவனித்திருந்த கலியாணசுந்தரம் தான் அவள் மூலமாகத் தனக்கு ஏதேனும் அனுகூலங்களைச் செய்து கொள்ளலாம் என்று நம்பிக்கையை முற்றிலும் இழந்தவனாய், அவளிடம் வாய் திறந்து பேசவும் மனமற்றவனாக இருந்தான். தனக்குச் சிகிச்சைகள் செய்த வைத்தியரைவிட அந்தத்தாதி நிரம்பவும் கொடிய மனுஷி என்ற எண்ணம் அவனது மனதில் பட்டது. ஆகையால் அவள் அவளிடம் பேசவே மனமற்றவனாக இருந்தான். மேலும் பல நாட்கள் கழிந்தன. கலியாணசுந்தரம் படுக்கையைவிட்டு எழுந்து நடக்கவும் தனது தேக சம்பந்தமான காரியங்களைத் தானே செய்து கொள்ளவும் வல்லமை அடைந்தான். அதன்பிறகு வைத்தியர் அவனது விடுதிக்கு வருவதை நிறுத்தி விட்டார். ஆனாலும், அவனுக்கு இரத்தபுஷ்டி உண்டாவதற்கு வேண்டிய ஒளஷதங்களை அவனிடத்திலேயே கொடுத்து வைத்தார். ஆனால், அவரோடு வந்து கொண்டிருந்த தாதிமாத்திரம் எப்போதும் போல வந்து, அவனுக்குரிய ஆகாராதிகளைக் கொடுத்துவிட்டு உயிரற்ற பதுமை போலவே போய்க் கொண்டிருந்தாள். நாட்கள் செல்லச் செல்ல கலியான சுந்தரத்தின் மனநிலைமை சிறிதும் சகிக்கக் கூடாததாக ஆகி விட்டது. இரவு பகல் அவனது மனதில் ஷண்முகவடிவைப் பற்றிய நினைவே மாறாதிருந்து அவனை உருக்கி ஒடுக்கி வந்தது; அவள் எங்கே இருக்கிறாள் என்பதையும் என்ன நிலைமையில் இருக்கிறாள் என்பதையும் தான் அவளுக்குக்