பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 79 விரைவாக ஜன்னலுக்குள் நுழைத்து வெள்ளையாக இருந்த ஏதோ ஒரு பொருளை உட்புறத்தில் போட்டுவிட்டுக் கையை அப்பால் இழுத்துக் கொண்டது அவனது திருஷ்டியில் பட்டது. அது என்றைக்கும் நிகழாத புதிய சம்பவமாக இருந்தது ஆகையால், அவனது கவனம் உடனே அந்தப் பொருளின்மீது சென்றது. உட்புறத்தில் ஜன்னலின் பக்கத்தில் வீழ்ந்த வெள்ளை நிறமுள்ள பொருள் என்னவாக இருக்கலாம் என்று அவன் அதை உற்று நோக்கினான். ஆனால், அது இன்னதென்பது நன்றாக விளங்கவில்லை. ஆகவே அதை எடுத்துப் பார்க்க வேண்டும் என்ற விலக்க முடியாத ஒருவித எண்ணம் தோன்றி அவனைத் துண்டியது. அவன் உடனே எழுந்து விரைவாக நடந்து ஜன்னலண்டை போய், தனது பார்வையை அப்புறம் செலுத்தி அவ்விடத்தில் யாராவது மனிதர் நிற்கிறார்களா என்று வெளிப்பக்கத்து தாழ்வாரத்தின் இரண்டு பக்கங்களிலும் எட்டிப் பார்த்தான். யாரும் காணப்படவில்லை. உடனே அவன் கீழே குனிந்து தரையில் கிடந்த வெள்ளைக்காகித உறையுள்ள ஒரு கடிதத்தை ஆவலோடு எடுத்துப் பார்க்க, அந்த உறையினது வாய் நன்றாக ஒட்டப்பட்டிருந்தது. அதன் ஒரு பக்கத்தில் ஏதோ மேல் விலாசம் எழுதப்பட்டிருந்தது. அவன் அந்த உறையைத் திருப்பிப் பார்க்க, அதன்மேல் தனது பெயரே எழுதப்பட்டிருக்கக் கண்டு பெரிதும் திடுக்கிட்டு சகிக்க வொண்ணாத ஆச்சரியம் அடைந்தான். அந்த ஊரில் தனக்குக் கடிதம் எழுதியனுப்பக் கூடியவர்கள் யாராக இருக்கலாம் என்று அவனது மனம் பலவாறு சந்தேகம் கொண்டது. மறுபடியும் அபிராமியே தனக்குக் கடிதம் எழுதித் தன்னை ஏதேனும் புதிய இடுக்கணில் புகுத்திவிட எண்ணுகிறாளோ என்ற சஞ்சலம் தோன்றியது. ஆகையால், அந்த ஒருவிநாடி நேரத்தில் அவனது மனம் எண்ணாததை எல்லாம் எண்ணிப் பரிதவித்தது. அதை உடைத்து அதற்குள் இருக்கும் செய்திதனக்கு அனுகூலமானதோ பிரதி கூலமானதோ என்பதை அறிந்துகொள்ள வேண்டும்

என்று அவனது உள்ளம் துடிதுடித்தது. ஆனாலும், மறுபடி அது ki,.G.IV-6