பக்கம்:பூர்ண சந்திரோதயம்-4.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பூர்ணசந்திரோதயம்-4 கொண்டதன்றி, தான் அதற்கு அனுசரணையாக நடந்து கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளவேண்டும் என்றும் அவன் தீர்மானித்துக் கொண்டான். அதுவுமன்றி, இன்னொரு விவரமான கடிதம் தனக்கு வெகுசீக்கிரத்தில் வந்து சேரும் என்றும், அதை நன்றாக ஆராய்ந்து பார்த்தால், அதில் இன்னார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது ஒருவாறு விளங்கலாம் என்றும் அவன் முடிவு செய்து கொண்டான். அந்தக் கடிதத்தைத் தான் கிழித்தெறியாமல் இரண்டொரு நாள் மறைத்து வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணமும் உண்டானது. ஆகையால், அவன் அந்தக் கடிதத்தையும் அதோடு சம்பந்தப் பட்ட உறை, பென்சல் முதலிய யாவற்றையும், தனது தலை யணையின் கீழ் மறைத்துவைத்துவிட்டு விசிப்பலகையின் மீது உட்கார, அப்போது அவன் இருந்த அறையின் கதவு திடீரென்று திறக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் அவனுக்கு எதிரில் பிரசன்னமானார்.

அவரைக் கண்ட கலியாணசுந்தரம் திடுக் கிட்டு எழுந்து நின்றான். சிறிது நேரத்திற்குமுன், ஜன்னலின் வழியாகத் தனக்குக் கடிதம் அனுப்பப்பட்டது என்பதை அறிந்து, தன்னைக் கண்டித்து எச்சரிப்பதற்காகவும், தனக்கு வந்த கடிதத்தை வாங்கி அதன் எழுத்தை ஆராய்ந்து பார்ப்பதற்காகவும் அவர் வந்திருப்பாரோஎன்ற சந்தேகமே முதன்மையாக அவனது மனதில் எழுந்தது. அதுவும் இல்லாதிருந்தால் போலீஸ் கமிஷனரே தனது கருத்தை உணரும் பொருட்டு யாரைக் கொண்டாகிலும் அந்தக் கடிதத்தை எழுதி உள்ளே போடச் செய்துவிட்டு, ஒன்றையும் அறியாதவர் போல உள்ளே வந்திருக்கலாம் என்ற யோசனையும் தோன்றியது. அவ்வாறு கலியாணசுந்தரம் பலவாறு எண்ணமிட்டு, எதையும் நிச்சயமாக நிர்ணயிக்க மாட்டாமல், அவர் தன்னிடம் எதற்காக வந்திருப்பாரோ என்ற கவலைகொண்டு மெளனமாக நிற்க, அவனிடம் நெருங்கி வந்த போலீஸ் கமிஷனர், ‘ஐயா நான்