பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iO2 பூர்ணசந்திரோதயம் - 5 காப்பாற்றியதுபோல அப்போதும் ஏதாகிலுமொரு சூழ்ச்சி செய்வார்; அல்லது, யாராகிலும் ஒரு மனிதரைக் கொணர்ந்து விடுவார் என்ற நம்பிக்கை அவளது மனதில் உறுதியாக வேரூன்றி இருந்தது. ஆனாலும், உட்புறம் தாளிடப்பட்டுள்ள அந்த ஒதுக்குப்புறமான இடத்தில் அந்த நடு இரவில் யார் வரப் போகிறார்கள் என்ற மலைப்பும் கவலையும் தோன்றி அவளை உலுப்பின. தனது மதியை இழந்து அத்தகைய தீய வழியில் செல்லும் அந்த மனிதருக்குத் தான் எவ்விதமான நியாயம் எடுத்துக் கூறினாலும், அது அவரது மனதில் உறைக்காது என்ற எண்ணம் தோன்றியது. ஆனாலும், தான் தப்பிப்போக வேறு வகையில்லை ஆதலால், தான் தன்னாலியன்ற வரையில் அவரை நயந்து வேண்டிப்பார்க்க வேண்டுமென்று அவள் முடிவு செய்து கொண்டு நிரம்பவும் பணிவாகவும் உருக்கமாகவும் இறைஞ்சியும் பேசத் தொடங்கி, ‘சுவாமிகளே! என்ன விபரீதம் இது? பேரின்பத்தை நாடி உலகைத் துறந்து காஷாயங்கொண்ட வர்களாகிய தாங்கள் தங்களுடைய மனசு இம்மாதிரி சலிக்க இடங் கொடுக்கலாமா? உலக தத்துவங்களை எல்லாம் உள்ளபடி அறிந்த ஞானியாகிய தாங்கள் மனசாலும் எண்ணக் கூடிய காரியமா இது? வேண்டாம். இவ்வளவோடு தங்களுடைய மனசை அடக்கிக் கொள்ளுங்கள். முன் தடவையில் தாங்கள் செய்ய நினைத்த பெரிய பாவத்தை ஈசுவரனே தடுத்து தங்களுக்கு நல்லவழிகாட்டி இருக்க, அதைத் தாங்கள் இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து, மறுபடியும் இப்படிப்பட்ட துன்மார்க்கத்தில் தங்கள் மனம் செல்லும்படி விடலாமா? தாங்கள் நடத்தும் தர்மமாகிய துறவறத்தின் பெருமை என்ன? தங்கள் மீதிருக்கும் காஷாய வஸ்திரத்தின் மகிமை என்ன? அவைகளுக்கெல்லாம் பெருத்த களங்கம் ஏற்படத்தக்க நினைவைத் தாங்கள் கொள்ளலாமா? தாங்கள் இதுவரையில் எத்தனையோ புண்ணிய கருமங்களைச் செய்திருப்பீர்கள்; தாங்கள் சதாகாலமும் ஈசுவரனைத் தொழுது பூஜை செய்து அவனுடைய பக்தியையே பெருந்துணையாகக்