பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பூர்ணசந்திரோதயம் - 5 கொண்டேன் என்று நீர் இப்படிச் செய்து உம்முடைய துராசையை நிறைவேற்ற எண்ணினால் அது உடனேநிறைவேறி விடுமென்ற எண்ணம் போலிருக்கிறது. இந்த உயிர் உள்ள வரையில் இந்த உடம் பு களங்கப்படும்படி நான் விடப் போகிறதில்லை. இதோ என் உயிரை ஒரு rணத்தில் மாய்த்துக் கொள்ளுகிறேன். இந்தப் பழியையும் பாவத்தையும் நீரேகட்டிக் கொள்ளும்” என்று கூறியவண்ணம் சடக்கென்றுவாயால் ஊதித் தனது கையிலிருந்த விளக்கை அணைத்துவிட்டு ஒரே பாய்ச்சலாக ஒரு மூலைக்குள் பாய்ந்து, அவரது பிடியினின்று விலகிநின்று, அந்த விளக்கின் மேல் மூடியைத் திறந்து, அதற்குள் இருந்த சீமை எண்ணெய் முழுதையும் கவிழ்த்துத் தனது புடவையில் கொட்டிக்கொண்டு நெருப்புப்பெட்டியைத் திறந்து ஒரு குச்சியை எடுத்துக் கிழித்துத் தனது புடவையில் பிடிக்க உடனே குபிரென்று புடவையில் நெருப்புப் பற்றி எரியத் தொடங்கியது.

அவள் விளக்கை அனைத்தவுடனே, அவ்விடத்தில் இருள் சூழ்ந்துகொண்டது. ஆகையால், பண்டாரம் அந்தப் பெண்ணரசி இன்னது செய்கிறாள் என்பதை உணராது, அவள் இருந்த இடத்தை அறியாது இருளில் தடவிப் பார்த்துக் கொண்டபோன சமயத்தில் அவர் எதிர்பார்க்காதபடி குபிரென்று ஒரு பெரிய பிரகாசம் உண்டானதைக் கண்டு திடுக்கிட்டு அந்த மடந்தையைப் பார்க்க, அவளது புடவை முழுதும் நெருப்புப் பற்றி ஒரே ஜ்வாலையாகக் கிளம்பி எரிவதைக் கண்டார். காணவே, அவரது மனதில் பெருத்த கிலியும் குழப்பமும் கவலையும் உண்டாகிவிட்டன. அவரது உடம்பு வெடவெட வென்று நடுங்கிப்பதறியது. அவளிடத்தில் விளக்கும் நெருப்புப் பெட்டியும் இருந்ததையும், அவற்றால் அவள் தனது உயிருக்கு ஹானி தேடிக்கொள்வாள் என்பதையும் தாம் சிறிதும் எண்ணாமல் மோசம் போய்விட்டதைப் பற்றியும், தமது கருத்து எப்படியும் நிறைவேறிப் போகுமென்று தாம் உறுதியாக