பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பூர்ணசந்திரோதயம்-5 மூட்டையைத் தூக்கிக்கொண்டு அவ்வளவு தூரம் வந்ததே, பண்டாரத்துக்கு நிரம்பவும் பிரயாசையாகிவிட்டது. அவருக்கு இரைப்பும் களைப்பும் உண்டாகிவிட்டன. அவரது கைகளும் நடுங்கித் தத்தளித்தன. அந்த நிலைமையில் தாம் வெகு தூரத்திற்கு அப்பால் மனிதரது பேச்சுக் குரலும் கேட்டது. யாரோ மனிதர் எதிரில் வந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை உடனே உணர்ந்து கொண்ட பண்டாரம் பெருத்த கிலியும் நடுக்கமும் அடைந்தார். தாம் திரும்பி வந்த வழியாகவே மறுபடி போனால், ஒரு வேளைரோந்துக்காரர்களுடைய கண்ணில்பட நேர்ந்தாலும் நேரலாமென்ற எண்ணம் ஒரு புறத்தில் வதைத்தது. ஆகையால், அவர் இருதலைக் கொள்ளி எறும் புபோல எந்தத் திக்கிலும் செல்லமாட்டாதவராய்ச்சிறிதுநேரம் தவித்துத் தயங்கி நின்றார். எதிரில் உண்டான மனிதரது பேச்சுக்குரல் நிரம்பவும் சமீபத்தில் நெருங்கி வந்து கொண்டிருந்தது. பக்கத்தில் எவ்விடத்திலாவது தாம் மறைந்து கொள்ளலாமென்ற நினைவோடு அவர் அப்புறம் இப்புறம் திரும்பி ஆராய்ச்சி செய்து பார்த்தார். இரண்டு பக்கங்களிலும் வீடுகள் வரிசையாக இருந்தனவே அன்றி மறைவான இடம் எதுவும் காணப்படவில்லை. ஆகையால், அவர் அந்த மூட்டையை அதற்குமேல் தாம் எடுத்துப் போவது உசிதமல்லவென்றும், பக்கத்தில் காணப்பட்ட ஒரு பெருத்த மாளிகையின் வாசற்படியில் அதை வைத்துவிட்டுத் தாம் வந்த வழியே திரும்பிப் போய்விட வேண்டுமென்றும் தீர்மானித்துக் கொண்டு விரைவாக நடந்து அந்த மாளிகையின் வாசற் கதவண்டை போய் நீளமாக இருந்தபாய் மூட்டையைக் கதவின் மேல் சார்த்திவைத்தபின் அவ்விடத்தை விட்டு ஒட்டமும் நடையுமாக நடந்து கிழக்கு திக்கில் போய்விட்டார். சிறிது நேரத்தில் மேற்குத் திக்கிலிருந்து வந்த சில மனிதர்கள் கதவில் சார்த்தப்பட்டிருந்த மூட்டையைக் கவனிக்காமல் அப்பால் போய்விட்டனர்.