பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பூர்ணசந்திரோதயம் -5 தான் பெருத்த அபாயங்கள் நேர்ந்தனவென்றும், அவர்கள்

அனுபவித்த துன்பங்களைப் போல் வேறே யாரும் - அனுபவிக்கவில்லை என்றும் புராணங்களில் படித்திருக்கிறேன். உனக்கு நேர்ந்திருக்கும் சங்கடங்களையும், ராமாயணம் பாரதம் முதலிய புஸ்தகங்களைவிடப் பத்துமடங்கு பெரிய புராணம் எழுதலாம் போலிருக்கிறது. உனக்கு இத்தனை துன்பங்கள் நேர்ந்ததற்கும் நீ பெரியவர்களுடைய துணை இன்றித் தனிமையில் இருந்ததே காரணமென்று நினைக்கிறேன். யெளவன பருவமும் அழகும் வாய்ந்த ஸ்திரீகள், நீ இருந்தது போலத் தனிமையில் இருப்பது சுத்தத் தவறு. தாய் தகப்பன் முதலிய பல பெரிய மனிதர்களின் கட்டுக் காவலில் நீ இருந்தால், உனக்கு எவ்வித அபாயமும் நேர்ந்திருக்காது. ஆனால், உன்னுடைய பரிசுத்தமான குணத்தையும், கற்பின் உறுதியையும் கண்டு நான் உன்னை நிரம்பவும் மெச்சுகிறேன். இவ்வளவு சுத்தமான மனிதர் இந்த உலகத்தில் இருப்பது அரிது. உண்மையில் உன்னை ஒரு தெய்வமென்றுதான் கொண்டாட வேண்டும். என்னவோ கடவுள் செயலால்தான் நீ இத்தனை இடர்களிலிருந்தும் நிஷகளங்கமாகத் தப்பித்து வந்தாய். நீ இவ்வளவு துன்பங்களை அனுபவித்து விட்டாயே என்று கடவுளே உன்மேல் இரக்கம் கொண்டு முடிவில் உன்னை என்னிடத்தில் கொண்டுவந்து சேர்த்துவிட்டதுபோலிருக்கிறது. என்னுடைய அபாரமான சொத்துக்களெல்லாம் வீணாய்ப் போகாமல், அவைகளை அடைவதற்குச் சகலமான யோக்கியதைகளும் வாய்ந்த உன்னை இங்கே கொண்டுவந்து சேர்த்துவிட்டது. இனி உனக்கு எந்த விஷயத்திலும் கொஞ்சமாவது கவலை என்பதே தேவையில்லை. உனக்கு இனி எவ்வித அபாயமும் நேராமல் பார்த்துக் கொள்ள நான் இருக்கிறேன். உன்னுடைய ஏழ்மைத்தனத்தை விலக்கி, உன்னை உயர்வான பதவியில் வைக்க என்னுடைய ஐசுவரியம் முழுதும் இனி உன்னுடைய அக்காள் இருக்குமிடத்தை நான் வெகுசீக்கிரத்தில் கண்டுபிடித்து நீ அவளைப் பார்க்கும்படி