பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i86 பூர்ணசந்திரோதயம் - 5 விவரத்தையும் சொல்லுங்கள்’ என்று நிரம்பவும் ஆவலோடு கூறினார்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர், ‘ஆம். நான் ஷண்முக வடிவை நேரில் கண்டு பேசிப் பழகி இருக்கிறேன். பரிசுத்த ஸ்வரூபிணி என்றால் அவளுக்கே தகும். அப்படிப்பட்ட குணத்தழகும், நடத்தை அழகும் வாய்ந்த உத்தமஜாதி ஸ்திரீயை நான் வேறே எங்கும் பார்த்ததே இல்லை. அதோடு அவளுடைய அழகோ கண்கொள்ளாத காட்சியாக இருந்தது. அவள் யாரோ ராஜஸ்திரீ என்று நான் முதலில் சந்தேகித்தேன். அது உண்மை யாகவே முடிந்துவிட்டது. அந்தப்பெண் மகாராஜனுக்கு ஜனித்தவள். ஆகையால் அப்ஸ்ர ஸ்திரீ போன்ற அபாரமான தேஜஸ் அவளிடம் ஜ்வலிக்கிறது. ஆனால், அவ்வளவு அபரிமிதமான சிறப்புகள் அவளிடத்தில் இருப்பதால், அந்தப் பெண்ணுக்குப் போகுமிடத்தில் எல்லாம் அபாயம் நேரக் கூடியதாக இருக்கிறது. இருந்தாலும், அந்த உத்தமி எப்பேர்ப்பட்ட பயங்கரமான அசந்தர்ப்பத்தில் அகப்பட்டுக் கொண்டாலும், தன்னுடைய கற்பிற்கு அற்பமான களங்கமும் இல்லாமலே தப்பி வந்துவிடக் கூடியவள். அதைப் பற்றிச் சந்தேகமே இல்லை. கமலமும் தன்னைப் போலவே இருப்பாளென்று அவள் தன்னிடம் தெரிவித்தாள்; அதைக் கேட்டவுடனே அப்பேர்ப்பட்ட இரண்டு பெண்களும் என்னுடைய தங்கைகளாக இருக்கக் கூடாதா என்ற ஒரு பைத்தியக்காரநினைவு என்மனதில் உண்டாயிற்று. உங்களைப் போன்ற பாக்கியவான் யாருமில்லை என்று நான் இப்போது உறுதியாகச் சொல்லுவேன். சரஸ்வதி, மகாலக்ஷ சமி போன்ற நிகரற்ற உத்தமியான அந்த இரண்டு பெண்மணிகளும் உங்களுடைய தங்கைகள் ஆனது, நான் ஏதோ ஒரு பெருத்த குபேர சம்பத்தை அடைந்தது போன்ற ஒரு குதூகலத்தையும் பூரிப்பையும் உண்டாக்கி நான் பரவசம் அடையும் படி

செய்கிறது” என்றார்.