பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 197 எப்படிப்பட்ட அபாயம் நேரிட்டது பார்த்தீர்களா அடுத்த rணத்தில் நமக்கு என்ன ஆபத்து வருமென்று தெரியாதபடி அல்லவா, சம்பவங்கள் திடீர்திடீரென்று நேருகின்றன. ஒர் அடி தூரத்தில் இவ்வளவு பெருத்த பயங்கரமான காரியம் நடந்திருக் கிறது. அதை நான் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேனே! அடாடா கடைசியில் லீலாவதியின் கதி இப்படியா முடிந்தது! ஐயோ! என்ன கொடுமை இது அவள் யெளவனப்பருவத்தின் அறியாமையினால் ஏதோ சில தவறுகள் செய்துவிட்டாள். ஆனாலும், அவளிடம் அருமையான பல நற் குணங்கள் இருந்ததை நான் உணர்ந்தேன். அவளுக்கு நான் உதவி செய்ய வேண்டுமென்ற என்தகப்பனாருடைய இச்சை கடைசியில் பூர்த்தியாகாமலா போய்விட்டது. எல்லாவற்றிற்கும் நான் மருங்காபுரி ஜெமீந்தாருடைய மாளிகைக்குப் போய், கிழவரை யாவது பார்த்து, லீலாவதி உண்மையிலேயே இறந்துபோய் விட்டாளா என்பதை நிச்சயித்துக் கொண்டால்தான் என் மனம் சமாதானப்படும் போலிருக்கிறது. ஆகையால், இப்போது அங்கே போய்விட்டு பிறகு என் ஜாகைக்குப் போகலாமென்று நினைக்கிறேன்’ என்றார்.

அதைக்கேட்ட இன்ஸ்பெக்டர், ‘அப்படியானால் நானும் உங்களோடு வருகிறேன். ஜெமீந்தாருடைய தேகஸ்திதி எப்படி இருக்கிறதென்பதைப் பார்த்துவிட்டு வரவேண்டுமென்ற ஆசை எனக்கும் உண்டாகிறது. அவர் எனக்கு நிரம்பவும் பழக்க மானவர். அதுவுமன்றி உத்தியோக தோரணையிலும் நான் அவரைப் பார்த்து, அவர் ஏதாவது சங்கதி வெளியிடக்கூடிய நிலைமையிலிருந்தால் அவரோடு பேசி, வீட்டில் நெருப்புப் பிடித்துக்கொண்ட வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், வீடு நெருப்புப் பிடித்து எரிந்த காலத்தில், அவர் விசைவைத்த நாற்காலியில் அகப்பட்டுக்கொண்டிருந்ததாக வேலைக்காரன் சொல்லுகிறான். ஆகையால், வேறே யாராவது மனிதர் வந்து அவரை நாற்காலியில் மாட்டிவிட்டு வீட்டில் நெருப்பு வைத்திருப்பாரென்று நினைக்க இடம் கொடுக்கிறது.