பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2OO பூர்ணசந்திரோதயம் - 5 மாளிகையில் நெருப்புப் பிடித்த காலத்தில் தாங்கள் ஏதோ ஒரு நாற்காலியில் மாட்டிக்கொண்டிருந்ததாக கோவிந்த சாமி தெரிவித்தான். அதிலிருந்து எனக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. நெருப்பு தற்செயலாகப் பிடித்திருக்காதென்றும், யாரோ அன்னிய மனிதனே தங்களை அப்படி நாற்காலியில் மாட்டிவிட்டு நெருப்பு வைத்திருக்க வேண்டுமென்றும் ஒரு சம்சயம் என் மனசில் உதிக்கிறது. அது விஷயமாக ஏதாவது சொல்லிக் கொள்ள வேண்டுமானால், தாங்கள் அதை ஒரு கடிதத்தில் எழுதிக்கொடுங்கள். லீலாவதியம்மாள் காணப்பட வில்லை. ஆகையால், அந்த அம்மாளைப் பற்றிய விவரங் களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளப் பிரியப்படுகிறேன்” என்றார்.

அவர் கூறிய சொற்களைக் கேட்ட கிழவரது முகம் ஒருவித பிரகாசமடைந்தது. இன்ஸ் பெக்டரது வருகையை எதிர்பார்த்தவர் போலவும், அவர் வந்ததனால் சந்தோஷம் அடைந்தவர் போலவும் ஜெமீந்தாரது முகத்தோற்றம் காண்பித்தது. அவர் உடனே தமது வலது கையை உயர்த்தி அருகில் நின்ற கோவிந்தசாமியை நோக்கி காகிதமும் எழுது கருவிகளும் எடுத்துவரும்படி சைகை காட்ட, அவன் உடனே அவைகளை எடுத்துவந்து, பக்கத்திலிருந்த ஒரு திண்டை அவருக்கு முன்னால் வைத்து, அதன்மேல் காகிதத்தை வைத்தான். உடனே மருங்காபுரி ஜெமீந்தார் நிரம் பவும் பாடுபட்டு தமது உடம்பைத் திருப்பி வலது கையை மெதுவாக உயர்த்தி கோவிந்தசாமி நீட்டிய இறகை வாங்கி காகிதத்தில் எழுதத் தொடங்கினார். அவரது கை நிரம்பவும் மெலிந்து பல ஹீனம் அடைந்திருந்தது. ஆகையால் அது தடதட வென்று நடுங்கியது. எழுத்துக்கள் தாறுமாறாகப் போயின. ஆனாலும், அவர் விடாமுயற்சி செய்து தமது முழு வல்லமையையும் வெளியிட்டுத்தமது கையைத் திடப்படுத்திக் கொண்டு விஷயங்களை அடியில் வருமாறு சுருக்கமாக எழுதினார்: