பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 243 விட்டு நடந்து அந்த அறையைவிட்டு வெளியில் போய்விட்டார். அவர் எந்த வாசலின் வழியாகச் சென்றாரோ அதன் கதவு உடனே மூடி வெளியில் தாளிடப்பட்டது.

அப்போதே ஷண்முவடிவிற்கு நல்ல மூச்சாக வந்தது. அவளது உயிரும் திரும்பியது. அவளது உடம்பையும் மனதை யும் இறுகப் பிடித்துக்கொண்டிருந்த நாணம் ஒருவாறு விலகியது. அவள் மறைந்துகொண்டிருந்த கம்பத்தைவிட்டு இப்பால் வந்து மறுபடியும் யாராவது வருகிறார்களோ என்று நாற் புறங்களிலும் திரும்பிப் பார்த்தாள். அதன்பிறகு அரை நாழிகை நேரம் வரையில் அந்த மின்னற்கொடியாள் ஆழ்ந்து யோசனை செய்தாள். அதுவரையில், நிரம் பவும் கொடிய பயங்கரமான எத்தனையோ இடர்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிய கடவுள் அப்போதும் தோன்றாத் துணைவராக இருந்து தன்னைக் காப்பாற்றுவார் என்ற ஒர் உறுதி அவளது மனதைவிட்டு அகலாதிருந்தது. ஆனாலும் அந்த இளவரசர், பேசிய உறுதியிலிருந்து அவர் தன்னை எளிதில் விடமாட்டார் என்பதும் தெரிந்தது. தான்.அந்த இடத்திலிருந்து எப்படித்தப்பிப் போகிறதென்று அவள் யோசனை செய்தாள். யாதொரு மார்க்கமும் தோன்றவில்லை. நாற்புறங்களிலும் கதவுகள் மூடி வெளியில் தாளிடப்பட்டிருந்தன. ஆனால், முன்பக்கத்திலிருந்து உள்பக்கத்தில் காற்று வீசியதை அவள் உணர்ந்து அங்கே போய்ப் பார்த்தாள். அவ்விடத்தில் கம்பியில்லாத பலகணி போன்ற திறப்பு ஒன்று காணப்பட்டது. அதன்வழியாக அவள்வெளியில் பார்க்க அந்த நகரத்தின் கிழக்கு ராஜவீதி அந்த மாளிகைக்கு அடுத்தாற்போல இருந்தது தென்பட்டது. அவள் கீழே குனிந்து பார்த்தாள். தரை சுமார் ஒரு பனைமர ஆழம் இருந்ததாகத் தெரிந்தது. மேன்மாடம் செங்குத்தாக இருந்தது. அங்கிருந்து கீழே பார்க்கும்போதே, குலைநடுக்கம் எடுத்தது. தான் தவறிக் கீழே விழுந்தால், எலும்புகள் கூட மிஞ்சுவது அரிதென்பது எளிதில் தெரிந்தது. அவள் தனது பார்வையை வெளியில்