பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 பூர்ணசந்திரோதயம் - 5 அதைக்கேட்ட இளவரசர், ‘ஆம்! ஐயா நிரபராதியென்று நீர் குறிக்கும் மனிதர் யார்? அவர் நிரபராதி என்பது உமக்கு எப்படித் தெரிந்தது? நீர்தக்க ஆதாரமில்லாமல் ஒருவருக்குப் பரிந்து பேச வந்து இந்த முக்கியமான சடங்குக்கு விக்கினம் செய்ய வந்திருக்கும் பrத்தில் உமக்குக் கடுமையான சிrை கிடைக்குமென்பதை நீர் தெரிந்து கொண்டீரா?’ என்றார்.

கலியாணசுந்தரம் பதற்றமில்லாமல் நிரம்பவும் சாந்தமாகப் பேசத்தொடங்கி, ‘மகாராஜாவே நான் யாருக்காகப் பரிந்து பேச வந்திருக்கிறேனோ, அந்த மனிதரை நான் நேரில் பார்த்தவனல்ல. அவர்களைப் பற்றிய வேறே வரலாறு எதுவும் எனக்குத் தெரியாது. அவர்களுக்காகப் பரிந்துபேசி அவர்களிடம் ஏதாவது பிரதி பிரயோசனம் அடையலாம் என்ற கருத்தோடவா வது வேறு எவ்விதமான கெட்ட கருத்தோடவாவது நான் இப்படிச் செய்ய முன்வரவில்லை. எனக்குக் கிடைத்த முக்கியமான ஒரு தகவலைக்கொண்டு, அநியாயமாக ஒரு மனிதருக்கு அவகேடு நேரப்போகிறதே என்று இரங்கி, அதைத் தடுக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு நான் வந்திருக்கிறேன். இப்படிப்பட்ட பரோபகாரச் செய்கையை மேற் கொண்டபிறகு நான் பலவித துன்பங்களை அனுபவித்து விட்டேன்; இனியும் எனக்கு எவ்விதமான பெருந்தீங்கு நேர்ந்தாலும் அதை நிரம் பவும் சந்தோஷமாக நான் அனுபவிக்கத் தயாராக இருக்கிறேன்’ என்றான்.

இளவரசர், ‘ஓகோ அப்படியா சங்கதி ஏற்கெனவேயே நீர் இதனால் துன்பங்களை அனுபவித்திருக்கிறீரா? நீர் சொல்வது நிரம் பவும் விந்தையாக இருப்பதோடு, அது எனக்குக் கொஞ்சமும் விளங்கவுமில்லை. வளைத்து வளைத்துப் பேசாமல் விஷயத்தைச் சுருக்கமாகச் சீக்கிரம் சொல்லும்; நேரமாகிறது” என்று அதட்டிக் கூறினார்.

கலியாணசுந்தரம், “மகாராஜாவே விஷயத்தை எடுத்துச் சொல்ல என் மனம் கூசுகிறது; ஆனாலும், அதைச்