பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 23 போலவே காணப்பட்டாள். அவளது அற்புதமான அழகையும், நற் குணங்களையும், அவள் என்னிடத்தில் நடந்துகொண்ட மாதிரியையும் காணக்கான அவளை நான் என்னுடைய குல தெய்வம் போலவே மதித்தேனன்றி வேறு சாதாரண ஸ்திரீயாக எண்ணவே இல்லை. அவளை நான் சதாகாலமும் என்னுடைய இருதய கமலத்தில் வைத்து அவளுடைய வடிவத்தையும் நினைவையுமே என் உயிர்த்தாரகமாகக் கொண்டு நான் நாள்களைப் பரம சந்தோஷமாகக் கழித்து வந்தேன். அதுவரை யில் அவளுக்கும் எனக்கும் கோபமான வார்த்தையாவது மனஸ்தாபமாவது ஏற்பட்டதே கிடையாது. ஆனால், இப்போதைக்குச் சுமார் பதினெட்டு வருஷகாலத்துக்குப் பிறகு எங்கள் குடும்பத்தைப் பிடித்த சனியன் பிரசன்னமானான். அந்தக் காலத்தில், எனக்கும் இந்த ஊர் இளவரசருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் முற்றி முற்றி ஆப்த சிநேகமாக மாறியது. அப்போது நானும் யெளவனப்புருஷன் இளவரசரும் யெளவனப் புருஷர். இருவருக்கும் பலவித விளையாட்டு களிலும் வேடிக்கைகளிலும் ஆசை அதிகம். ஆகையால், நாங்களிருவரும் அடிக்கடி ஒன்றாகக் கூடிப் பலவிதமாக விளையாடி பொழுது போக்கி வந்தோம். நாங்கள் இருவரும் பரஸ்பரம் பிரியமும் பற்றும் உடையவர்களாய், ஒருவரை யொருவர் ஒரு rண நேரமேனும் விடுத்துப் பிரிய சகியாதவர்களாக மாறிவிட்டோம். இளவரசர் அடிக்கடி என்னைத் தம்முடைய அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போய் விருந்து முதலியவை நடத்தி வைப்பார்; தமக்காகத் தயாரிக்கப்படும் மதுரமான பட்சன பலகாரங்களை எல்லாம் எனக்குக் கொடுத்து என்னையும் சமபந்தியாகக் கூடவைத்துக் கொண்டு அவர் சகலமான தின்பண்டங்களையும் உண்பார். அப்படி நாங்கள் இருவரும் புருஷர் பெண்சாதிகளைவிட அதிக அந்தரங்கமான பிரியமும் பாசமும் உடையவர்களாய் மாறிப்போனோம். நான் அரண்மனைக்குப் போகக் கொஞ்சம் தாமதமாகுமானால், அவர் என்னைத் தேடிக்கொண்டு என்