பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 பூர்ணசந்திரோதயம்-5 அந்த அக்கிரமம் நடைபெறும்படி பார்த்திருப்பது கொடிய பாவமென்றும், இனி தான் எப்படியும் கமலத்தைக் காட்டிக் கொடுத்தாவது அதைத் தடுக்க வேண்டுமென்றும் தீர்மானித்துக் கொண்டவனாய், “ஏ கமலம்! கமலம்! அநியாயமாக ஒருவருடைய வயிறு எரியச் செய்து நீ பெரிய பதவியை அடைந்தால், அந்த வதை உன்னை ஒருநாளும் விடாது. நீ அடையும் பதவியும் நீடித்து நிற்காது. ஆகையால், இந்த அக்கிரமத்தில் இறங்காதே; இவ்வளவோடு விலகிக்கொள். நீ இந்தப் பட்டமகிஷியின் ஸ்தானத்தை அடைந்து மற்ற சாதாரண ஸ்திரீகள் அனுபவிக்காத எந்த அபாரமான புதிய சுகத்தை அனுபவிக்கப் போகிறாய்? ஒன்று மில்லை. ஆறு நிறையத் தண்ணிர் போனாலும், நாய் நக்கியே குடிக்க வேண்டுமென்று ஜனங்கள் சொல்வதுண்டு. அதுபோல, இந்தப் பூலோகத்தில் ஒருவனிடம் அபாரமானசெல்வமும், இன்பங்களும் சுகங்களும் கணக்கிலடங்காமல் நிறைந்து கிடந்தாலும் அவனுடைய பஞ்சேந்திரியங்களின் சக்தி அற்ப மானதே. ஆகையால், அவன் எல்லாவற்றையும் அனுபவிக்க முடியாது. அவன்அனுபவிக்கக் கூடியது அற்பத்திலும் அற்பமானதே. நீ பட்டமகிஷி பதவியிலிருந்தாலும், வேறு சாதாரணமான இடத்திலிருந் தாலும், உனக்குத் தேவையானவைகளும் நீஅனுபவிக்கக்கூடிய சுகங்களும் எப்படியும் உனக்குக் கிடைக்கும். ஆகையால், பேராசை என்ற பேயினால் மதியை இழந்து அக்கிரமத்தில் இறங்கிப் பெரிய பாவ மூட்டையைச் சம்பாதித்துக் கொள்ளாதே, வேண்டாம். இவ்வளவோடு நின்றுவிடு. உன் தங்கை ஷண்முகவடிவின் குணத்தைப் பின்பற்றி நடந்துகொள். உன் தங்கை எவ்விடத்திலும் காணப்படாமல் எங்கேயோ அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நீ அவளைப் பற்றி வருந்தி, அவளைத் தேடவேண்டிய முயற்சிகளைச் செய்ய வேண்டும். அதைவிட்டு இப்படிப்பட்ட கலியாணச் சடங்கில் உடன்பட்டிருப்பது அனு சிதமான காரியம். நன்றாக யோசனை செய்து பார்; அவசரப்படாதே” என்று வாய்விட்டுப் பலமாகக் கூவினான்.