பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 285 ஆகையால், உம்மை நான் அசட்டை செய்தனுப்ப இஷ்டப்பட வில்லை. நீர் இந்தப் பெண் என்னுடைய சொந்த மகளென்று சொன்னரே. அது உண்மை தான் என்று என் மனம் திருப்தி கரமாக நம்பும் படி உம்மிடம் ஏதாவது தக்க ஆதாரம் இருக்கிறதா? இருந்தால், எடுத்துக் காட்டும்’ என்று நிரம்பவும் கம்பீரமாகக் கூறினார்.

உடனே நீலமேகம்பிள்ளை நயமாகப் பேசத் தொடங்கி, ‘மகாராஜாவே தாங்கள் என் விஷயத்தில் இவ்வளவு மதிப்பு வைத்து நான் சொல்வதைக் கேட்பதற்கு இணங்கினர்களே. அது விஷயத்தில் நான்தங்களுக்கு நிரம்பவும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். நான் சொன்ன செய்தி ஆதாரமில்லாமல் சொல்லப்பட்டதல்ல. நான் ஏற்கெனவே சொன்னபடி, இதோ என் வசத்திலிருக்கும் ஒரு தஸ்தாவேஜியை தாங்கள் படிப்பீர்களானால் அதுவே போதுமானது. அதற்குமேல் தாங்கள் என்னிடம் ஆதாரம் எதுவும் கேட்கமாட்டீர்கள். ஆனால், இந்த தஸ்தாவேஜியைத் தாங்கள் இந்த இடத்திலிருந்து படிப்பது உசிதமாகத் தோன்றவில்லை. பக்கத்தில் அந்தரங்கமான அறை ஏதாவது இருக்குமானால், அவ்விடத்திற்குத் தாங்கள் என்னையும் இந்தப் பெண்ணையும் அழைத்துக் கொண்டு போனால், அவ்விடத்தில் நாம் விரிவாகப் பேசிக் கொள்ளலாம்” என்றார்.

அதைக்கேட்ட இளவரசர் அதிக காலஹரணமாவதை எண்ணி நிரம் பவும் பதறினார். ஆனாலும் நீலமேகம் பிள்ளையின் வேண்டுகோளை மீறி நடக்க மாட்டாதவராய் அவரை நோக்கி, “ஐயா! நீர்தக்க பெரிய மனிதர்வீட்டுப்பிள்ளை என்பதைக்கருதி உம்முடைய வேண்டுகோளின்படி நான் செய்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை ஏற்படுத்துகிறேன். அதற்கு நீர் இணங்க வேண்டும். இவ்வளவு முக்கியமான சடங்கு நடக்கும் சமயத்தில் நீர் அதற்கு விக்கினம் செய்து எங்களை அழைத்துக்கொண்டு போகிறீர். நீர் சொன்ன செய்தி பொய்யாக முடியுமானால்,