பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 287 வும் மாட்டார் என்ற நினைவும், தனக்குப் பட்ட மகிஷி ஸ்தானம் கிடைக்காமல் போனாலும், ராஜகுமாரியின் பதவியும் செல்வமுமாவது எப்படியும் கிடைக்கும் என்ற நினைவும் தோன்றி அவளது மனதில் ஒருவித ஆறுதலையும் துணிவையும் உண்டாக்கிக் கொண்டிருந்தன. அவள் முதன் முதல் தஞ்சைக்கு வந்த அன்றைய தினம் சோமசுந்தரம் பிள்ளையைத் தேடிக்கொண்டு போன சமயத்தில் நீலமேகம்பிள்ளையைத் ஒருமுறை பார்த்தாள். ஆனாலும், அதன்பிறகு, அவளது வாழ்க்கையில் ஏற்பட்ட பற்பல மாறுபாடுகளில் அவளைப் பற்றிய ஞாபகத்தையே அவள் மறந்துவிட்டாள். அதுவுமன்றி, அவரது பெயரும் அவளுக்கு ஞாபகமில்லாமல் போயிற்று. ஆகவே, நீலமேகம் பிள்ளை இன்னார் என்ற விபரமே அவளுக்குச் சிறிதும் புலப்படாமல் இருந்தது. ஆனாலும், தான் இளவரசரது மகளென்பது சொந்த தகப்பானருக்கே தெரியாமல், யாரோ ஒர் அன்னிய மனிதருக்கு எப்படித் தெரிந்திருக்கக் கூடுமென்றும், அவர் படிக்கச் சொல்லும் தஸ்தாவேஜி என்னவிதமான தஸ்தாவேஜியாக இருக்குமென்றும் பலவாறு சந்தேகித்தவளாய்க் குனிந்த தலையை நிமிர்க்காமல் தோகை விரித்த கலாப மயில் போலத் தனது திருக்கல்யாணக் கோலத்தோடு அவர்களோடு அந்த அந்தரங்க விடுதிக்குள் சென்று நாணமும், கிலேசமும் நிறைந்தவளாய் ஒரு கம்பத்தின் மறைவில் நின்றாள்.

அவ்விடத்தில் காணப்பட ஒர் உன்னத ஆசனத்தின் மீது இளவரசர் அமர்ந்து கம்பீரமாக நிமிர்ந்து, ‘ஐயா நீலமேகம் பிள்ளை எங்கே? அந்த தஸ்தாவேஜியை எடும். அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கிறேன்’ என்று அமர்த்தலாகக் கூறினார்.

உடனே நீலமேகம்பிள்ளை சட்டைப் பையிலிருந்த தமது தந்தையின் உயிலை எடுத்து நிரம்பவும் வணக்கமாக இளவரசரிடம் கொடுத்து, ‘மகாராஜா என் தகப்பனார் சமீப

பூ.ச.V-19