பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 பூர்ணசந்திரோதயம் - 5 சாமளராவும் சேர்ந்தா இப்படிப்பட்ட தந்திரம் செய்தார்கள் அவர்களுக்கும் உனக்கும் பழக்கம் உண்டென்பதைக் கொஞ்ச மாவது காட்டிக் கொள்ளாமல் அவர்கள் எவ்வளவு சாமர்த்திய மாக நடித்திருக்கிறார்கள். ஆகா! அவர்களுடைய சூதா இது? அப்படியானால் இப்போது கொஞ்ச நேரத்துக்கு முன் ஒரு மனிதர் வந்து அம்மணிபாயியின் மேல் சொன்ன விஷயங்கள் கூட ஒருவேளை உண்மையாயிருக்கும் போலிருக்கிறதே! ஆனால், அதில் முக்கியமான ஒர் அம் ஸ்ம் இருக்கிறது. அதாவது, லலிதகுமாரி தேவியின் உடம்பை நான் என்கண்ணால் பார்த்தேன். ஆகையால், அவள் குற்றவாளிதான் என்பது நிச்சயமாகிறது’ என்றார்.

பூர்ணசந்திரோதயம் ஒருவித முகமாறுதல் அடைந்த வளாய், ‘'மகாராஜாவே அந்த விஷயமும் இவர்களுடைய சூழ்ச்சியினால் நடந்ததுதான். அதை நான் என் வாயில் வைத்துச் சொல்லவே கூசுகிறது. அந்த விஷயத்தில் இவர்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்த பிறகே, எனக்கு அதைத் தெரிவித்தார்கள். என்மேல் தாங்கள் பிரியப்படுவதைக் கண்ட பிறகு, என்னைத் தங்களுடைய பட்டமகிஷியாக்கி, என்னால் அவர்கள் ஒரு ஜெமீன் சமஸ்தானத்தைச் சன்மானமாகப் பெற வேண்டுமென்பது அவர்களுடைய கருத்து; இப்போது பேசிவிட்டுப் போன மனிதர் இவர்களைப் பற்றிச் சொன்ன தெல்லாம் உண்மையான செய்தியே. கொஞ்சமும் தவறு இல்லை. தங்கள் பட்டமகிஷி தேவியார் யாதொரு தோஷமு மில்லாத மகா புனிதவதி என்பதைப்பற்றிக் கொஞ்சமும் சந்தேகமில்லை. அவர்களின் மேல் இப்படிப்பட்ட சதியாலோ சனையும் அவதூறும் ஏற்பட்டிருக்கின்றன என்பது அவர்களுக்கு இன்னமும் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன். எல்லாம் அம்மணிபாயியின் வஞ்சகச் சூழ்ச்சியே’ என்றாள்.

இளவரசர் திடுக்கிட்டு, ‘என்ன ஆச்சரியம்! நீ சொல்வது எனக்கு நன்றாக விளங்கவில்லையே! நீ சொல்வது