பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 பூர்ணசந்திரோதயம் - 5 அவரைப் போன்ற வடிவமுள்ள வேறே மனிதரா என்ற சந்தேகம் கூட இப்போது எனக்கு உண்டாகியது. இந்த ராஜ்யத்தில் ஜெமீந்தார்கள் எல்லோரிலும் சகலமான அம்சங்களிலும் சிறந்தவர் யாரென்றால், எல்லோரும் ரrாமிர்தம் ஜெமீந்தார் என்று சொல்வார்கள். செல்வத்திலும் சரி, அழகிலும் , உத்தமமான குணவிசேஷங்களிலும் சரி,இன்னும் ஒவ்வொரு விஷயத்திலும் உமக்கு நிகரானவர் நீரேயன்றி வேறே யாருமில்லை என்று சொல்லுகிறார்கள். நான் கூட உமக்குச் சமமாவேனோ என்று நான்பலதடவைகளில் சந்தேகித்ததுண்டு. அப்படிப்பட்ட தெய்வீக லக்ஷணங்களும் சீல குணமும் வாய்ந்தவராகிய நீர் நான் ஒரு ஸ்திரீயோடு தனியாக இருக்கும் இந்த இடத்திற்குள் நுழைவது ஒழுங்காகுமா? எல்லா வற்றையும் உணர்ந்து எல்லோருக்கும் நற்குணமும் நன்னடத்தை யும் கற்றுக் கொடுக்கத் தக்க நிலைமையிலுள்ள உமக்கு நான் புத்தி சொல்வதென்றால் என் மனம் கிலேசமடைகிறது’ என்றார்.

அதைக் கேட்ட ரrாமிர்தம் ஜெமீந்தார் நிரம் பவும் பணிவாகவும் மிகுந்த கிலேசத்தோடும் பேசத் தொடங்கி, ‘மகாராஜா நான் செய்வது தவறு என்பதை அறிந்தும், ஒர் அவசரமான விஷயத்தைக் கருதி உள்ளே வர நேர்ந்தது. கோபிக்கக்கூடாது. இங்கே இருக்கும் கமலம் என்ற பெண்ணின் தங்கை என் வீட்டிலிருக்கிறாள். அவளை இங்கே அழைத்து வரும்படி ஒரு தாதியை அவசரமாக அனுப்பியிருக்கிறேன். இந்த அறைக்குப் பின்புறவாசல் ஏதாவது இருந்தால் அதன் வழியாக அழைத்துவரும்படி நான் சொல்லி அனுப்பியிருக்கிறேன். அவள் போய்க் கால்நாழிகை நேரமிருக்கும். இன்னம் சொற்ப நேரத்தில் வந்துவிடுவாள். தாங்கள்.கதவைத் திறந்தால், நானும் உள்ளே வரலாமென்று கொஞ்சநேரமாக நான் வாசற் படி யிலேயே இருந்தேன். தாங்கள் வெளியிலிருந்தபடி என்னோடு பேசினால்,ஜனங்கள் நம்மைப் பார்த்து ஏதாவது நினைத்துக்