பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 பூர்ணசந்திரோதயம்-5 யும் தாங்க மாட்டாதவராய்த் தேம்பித் தேம்பி அழுதனர். இருவரது தேகங்களும் பிரசண்டமாருதத்தில் பட்டு அல்லல் படும் மாந்தளிர் போல நடுங்கிப் பதறியது. அவர்களிருவரும் மற்றவர் இருப்பதை மறந்து அவ்வாறு சுவர்க்க போகம் அனுபவித்துக் கொண்டு மெளனத்தில் ஆழ்ந்திருக்க, அந்த நிலைமையைக் கண்ட நீலமேகம் பிள்ளையும் தம்மைமீறித் தடதடத்துப்போய் கண்ணிர் விடுத்து வாய்விட்டுத் தேம்பித் தேம்பி அழுதார். இருவரும் ஒரே மாதிரியான தோற்றத்தோடு இரண்டு அப்ஸ்ர ஸ்திரீகள்போல இருந்ததையும் ஷண்முக வடிவு மகாலக, மியின் அவதாரம் போலவும், கமலம் சரஸ்வதியின் அவதாரம் போலவும் இருந்ததைக் காணக்கான அப்படிப்பட்ட இருவரும் தமது தங்கைகள் என்ற நினைவினால் அவளது மெய் புளகித்துப் பரவசமடைந்தது. அப்போதே ஷண்முகவடிவின் முகத்தை நன்றாக உற்றுப்பார்த்த இளவரசர் திடுக்கிட்டுப் பெரிதும் திகிலும் கலக்கமும் முகமாறுபாடும் அடைந்து, ‘என்ன ஆச்சரியம் இது இந்தப் பெண்ணா ஷண்முகவடிவு ஆகா! எனக்குத் தெரியாமலேயே நான் செய்திருக்கும் பாவக் கிருத்தியங்களுக்கு முடிவு இராது போலிருக்கிறதே! பாவச் செய்கையை ஷண்முகவடிவினி டத்திலும் அல்லவா செய்ய முயன்றேன். ஆகா! என்ன கஷ்டம்

இது என் குழந்தைகளைக் கண்டு நானே துர்மோகம்

கொள்ளும்படி ஈசுவரன் செய்ய வேண்டுமா? ஐயோ! நான் இவர்களை இன்னார் என்று தெரிந்துகொள்ள வேறு வழி இல்லையா? நான் இவர்களைக் கண்டு தப்பான எண்ணங்

கொண்டுதானா இவர்கள் என் குழந்தைகள் என்பதைக்

கண்டுபிடிக்க வேண்டும்? இதனால் என் குழந்தைகளின் மேன்மைக்குணமும், கற்பின் உறுதியும் நன்றாக வெளியான தோடு என்னுடைய துர்க் குணமும் கண்டிக்கப்பட்டது போலாயிற்று. எனக்கு நற்புத்தி புகட்டி என் குழந்தைகளை என்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமென்ற கருத்தோடு

கடவுள் இம்மாதிரியான திருவிளையாடல் நடத்தி இருக்கிறா